தஞ்சை மாணவனின் அறிவியல் சாதனை... விண்ணில் பறக்கவுள்ள சாட்டிலைட்!

ரியாஸ்தீன் என்பவர் தஞ்சையை அடுத்துள்ள கரந்தை பகுதியே சார்ந்தவர். இவர் தஞ்சாவூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.டெக் மெக்கட்ரானிக்ஸ் படித்து வந்துள்ள நிலையில் தற்போது உலகிலேயே மிகவும் எடை குறைவான இரண்டு வகை சாட்டிலைட்டை கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளாா்.

ஆம்! அமெரிக்காவை சேர்ந்த I Doodle Learning நிறுவனம் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி கழகமான நாசா உடன் இணைந்து cubes in space என்ற புதிய கண்டுபிடிப்புகளுக்கான போட்டி ஆண்டு தோறும் நடைபெறும். மேலும் 2019-2020 ஆம் ஆண்டுக்கான போட்டியில் 73 நாடுகளிலிருந்து ஆயிரக்கணக்கான மாணவர்கள் கலந்துகொண்ட நிலையில் இந்தியாவைச் சேர்ந்த மாணவர் ரியாஸ்தீன் இரண்டு சாட்டிலைட்டுகளை வடிவமைத்து தேர்வாகியுள்ளாா்

மேலும் இவர் கண்டுபிடித்த இரண்டு சாட்லைட்டுகளும் பாலி எதரி இமைடு அல்டம் என்ற தெர்மோ பிளாஸ்டிக்கால் மற்றும் 3டி பிரிண்டிங் தொழில் நுட்பத்தைக்கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.மேலும் இதில் 11 சென்சார்களும் அதன்மூலம் 17 parameter-களை கண்டறியும் திறனையும் கொண்டுள்ளது.இந்த இரு சாட்டிலைட்டுகளும் 37mm உயரமுடையது மற்றும் 33 கிராம் எடையுடையது என்பது குறிபிடதக்கது.இந்த சாட்லைட்களுக்கு விஷன் சாட் V1 மற்றும் V2 என்று பெயரிடப்பட்டுள்ளது.
இந்த இரண்டு Femto சாட்லைட்கள் 2021ஆம் ஆண்டு நாசாவில் இருந்து விண்ணில் செலுத்தபட உள்ளதாக ரியாஸ்தீன் கூறியுள்ளதாக செய்திகள் வெளி வந்துள்ளன.

You'r reading தஞ்சை மாணவனின் அறிவியல் சாதனை... விண்ணில் பறக்கவுள்ள சாட்டிலைட்! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - பா.ரஞ்சித் படம் கேரள சர்வதேச பட விழாவுக்கு தேர்வு

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்