எடப்பாடியே முதல்வர் வேட்பாளர்.. இல்லையேல் ஒதுக்கி வைப்போம்!.. கே.பி.முனுசாமி

தமிழகத்தில் பாஜக இடம் பெற்றுள்ள கூட்டணிக்கு அதிமுகதான் தலைமை என்பதால், அதிமுக சார்பில் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமியே என அறிவிக்கப்பட்டு, பிரசாரமும் தொடங்கப்பட்டுள்ளது. ஆனால் கூட்டணியில் இருக்கும் பாஜக கூட்டணியில் பாஜக முதல்வர் முதல்வர் யார் என்பதை மோடி முடிவு செய்வார் அமித்ஷா முடிவு செய்வார். மேலிடம் முடிவு செய்யவும் என்றெல்லாம் சொல்லி செய்து வருகிறார்கள். முதல்வர் யார் என்பதை மோடி முடிவு செய்வார்.. அமித்ஷா முடிவு செய்வார்.. மேலிடம் முடிவு செய்யும்.. என்றெல்லாம் சொல்லி அதிமுக அவைத் தொடர்ந்து சீண்டி வருகிறது.

இந்த நிலையில், தமிழக பாஜகவின் 234 சட்டமன்ற தொகுதிகளின் அமைப்பாளர்கள், பொறுப்பாளர்கள் மாவட்ட தலைவர்களின் ஆலோசனை கூட்டம் மேலிட பொறுப்பாளர் சி.டி ரவி, மாநில தலைவர் எல்.முருகன் தலைமையில் இன்று நடந்தது. கூட்டத்திற்கு பின்னர் மேலிடப்பொறுப்பாளர் சிடி.ரவி செய்தியாளர்களிடம் கூறியதாவது: சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர்தான், முதல்வரை தேசிய ஜனநாயக கூட்டணியே முடிவு செய்யும். தேசிய ஜனநாயக கூட்டணிதான் வரும் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறும். எங்கள் கூட்டணி உறுதியான கூட்டணி. மேலும், தேர்தல் தேதி அறிவிப்புக்கு பிறகு, தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் முதல்வர், துணை முதல்வர் வேட்பாளர் குறித்து அறிவிக்கப்படும்." என்றார்.

இதற்கு பதிலடியாக பேசியுள்ள அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, ``பாஜக கருத்து முகாந்திரம் இல்லா கருத்து. அதிமுக தலைமை முடிவு செய்த எடப்பாடி பழனிசாமியே முதல்வர் வேட்பாளர். ஓ பன்னீர்செல்வம் கூறிய வேதவாக்கு எங்கள் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி என்பது தான். இதில் யார் இடையூறாக வந்தாலும் ஒதுக்கி வைப்போம்” என்றார்.

You'r reading எடப்பாடியே முதல்வர் வேட்பாளர்.. இல்லையேல் ஒதுக்கி வைப்போம்!.. கே.பி.முனுசாமி Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - குவாரன்டைன் எப்படி இருந்தது மை பிரெண்ட்.. இந்திய அணியுடன் இணைந்த ரோகித் சர்மா!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்