தேர்வு நடந்தது செப்டம்பர் சான்றிதழில் மே மாதமே பதிவு... அண்ணா பல்கலைகழக குழப்பம்!

கொரோனா தொற்று காரணமாக கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் நாடு முழுவதும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. இதனால், கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டன. கல்லூரி பருவத் தேர்வுகளும் ரத்துசெய்யப்பட்டன. இருப்பினும், அண்ணா பல்கலைக்கழகம் கடந்த செப்டம்பர் மாதம் பொறியியல் இறுதி ஆண்டு மாணவர்களுக்கான இறுதி பருவத் தேர்வை இணைய வழியில் நடத்தியது. இதில் தேர்ச்சி பெற்று, பட்டப்படிப்பு முடித்ததாக சான்றிதழ் பெற்ற மாணவர்களுக்கு மே மாதம் பருவத் தேர்வு நடைபெற்றதாக பல்கலைக்கழகம் சான்றிதழ் வழங்கியுள்ளது.

ஆனால், பொறியியல் கல்லூரிகளோ செப்டம்பரில் தேர்வு நடந்ததாக குறிப்பிட்டுள்ளன. இதன் காரணமாக, இதனால் மாணவர்கள் குழப்பத்தில் உள்ளனர். இதனால், எதிர்காலத்தில் ஏதேனும் பிரச்சனைகள் வருமோ? என்றும் அஞ்சுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பாக பல்லைக்கழக மாணவரின் பொற்றோர் கூறுகையில், சென்னையில் தனியார் பொறியியல் கல்லூரியில் படித்த என்மகன் இறுதி பருவத் தேர்வை கடந்த செப்டம்பர் மாதம் எழுதினான். ஆனால், கல்லூரி வழங்கிய சான்றிழிலும் அப்படிதான் செப்படம்பரில் தேர்வு எழுதியதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், அண்ணா பல்கலைக்கழகம் வழங்கிய சான்றிதழில் மே மாதம் தேர்வு எழுதியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இது எனது மகனுக்கு பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜப்பான் நிறுவன பணிக்காக எனது மகன் விண்ணப்பித்தார். பல்கலைக்கழக சான்றிதழை பார்த்த நிறுவனம், மே மாதம் உலகமே பொது முடக்கத்தில் இருந்தபோது நீங்கள் மட்டும் எப்படி தேர்வு எழுதினீர்கள் என்று கேள்வி எழுப்பி, பல்கலைக்கழக சான்றிதழில் முரண்பாடு இருப்பதாக கூறி விண்ணப்பத்தை நிராகரித்துவிட்டனர் என்றார். இது தொடர்பாக அண்ணா பல்கலை மற்றும் கல்லூரியில் கேட்டதற்கு சரியான பதில் அளிக்கப்படவில்லை. எனவே, சான்றிதழ் முரண்பாடு குறித்து ஏஐசிடிஇயிடம் புகார் கொடுக்க உள்ளேன் என்று தெரிவித்தார்.

இது குறித்து அண்ணா பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் வெங்கடேசனிடம், கூறுகையில், பொறியியல் மாணவர்கள் 4 ஆண்டுகளில் பட்டப் படிப்பை முடிக்கும்போது, மே மாதம் தேர்வு எழுதி முடித்ததாகத்தான் சான்றிதழ் வழங்க வேண்டும் என்ற விதிமுறை உள்ளது. எனவே,கொரோனா தொற்று காரணமாக காரணமாக கடந்த செப்டம்பர் மாதம் தேர்வு எழுதியிருந்தாலும், மே மாதம் எழுதியதாகவே வழங்க முடியும். இதனால், எந்த பாதிப்பும் ஏற்படாது. இதுதொடர்பாக மாணவர்கள் பாதிக்கப்பட்டிருந்தால் பல்கலைக்கழகத்தை அணுகலாம் என்று தெரிவித்துள்ளார்.

You'r reading தேர்வு நடந்தது செப்டம்பர் சான்றிதழில் மே மாதமே பதிவு... அண்ணா பல்கலைகழக குழப்பம்! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - `கோரி்க்கையை மத்திய அரசு பரிசீலிக்கவில்லை... இந்தியாவில் இருந்து வெளியேற டிக் டாக் முடிவு!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்