கதவே இல்லாத கோயிலில் சிறுமியை எப்படி அடைக்க முடியும் எச்.ராஜா அறிவுபூர்வ கேள்வி

கதவே இல்லாத கோயிலில் சிறுமியை எப்படி அடைத்து வைத்திருக்க முடியும்rdquo என்று எச்.ராஜா கூறியுள்ளார்.

கதவே இல்லாத கோயிலில் சிறுமியை எப்படி அடைத்து வைத்திருக்க முடியும்” என்று எச்.ராஜா கூறியுள்ளார்.

கடந்த ஜனவரி 10, 2018 அன்று எட்டு வயது ஆசிஃபா பானு, ஜம்மு காஷ்மீரின் கத்துவா மாவட்டத்தில் அன்று காணாமல் போனாள், அவளது இல்லத்தில் இருந்து ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவில் அசிபாவின் உடல் ஜனவரி 17, 2018 அன்று கிடைத்தது.

அசிபாவை கடத்தியவர்கள் அவளை கொலை செய்வதற்கு முன்பாக பலாத்காரம் செய்திருக்கிறார்கள் என்பது உறுதிப்படுத்தப்பட்டது. அவளது தோள்பட்டை எலும்பு, நெஞ்செலும்புகள், கைகள், இடுப்பு எலும்புகள் யாவும் நொறுங்கிய நிலையில் இருந்தது. அசிபாவை பல நாட்கள் கூட்டு பலாத்காரம் செய்து அவள் மீது மின்சாரம் பாய்ச்சியிருக்கிறார்கள்.

இந்த மொத்த செயலையும் செய்தவர்கள் காஷ்மீரில் வசிக்கும் இந்து அமைப்பை சேர்ந்தவர்கள் என்பதும் அதில் காவல் அதிகாரி ஒருவரும் அடங்குவார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் திருவாரூரில் கூத்தாநல்லூரில் செய்தியாளர்களை சந்தித்த போது பேசிய பாஜக தேசிய செயலாளர் எச் ராஜா, காஷ்மீர் சிறுமி கொலை மன்னிக்க முடியாத குற்றம். இதுகுறித்து அரசு நிச்சயமாக நடவடிக்கை எடுக்கும். கதவே இல்லாத கோயிலில் சிறுமியை எப்படி அடைத்து வைத்திருக்க முடியும்” என்று கூறியுள்ளார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading கதவே இல்லாத கோயிலில் சிறுமியை எப்படி அடைக்க முடியும் எச்.ராஜா அறிவுபூர்வ கேள்வி Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - குழந்தைகள் விரும்பி சாப்பிடும் தயிர் மசாலா இட்லி சாட்..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்