எஸ்.வி. சேகர் மீது மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் வழக்கு பதிவு

ஸ்.வி. சேகர் மீது வழக்கு பதிவு

நடிகரும் பாஜக பிரமுகருமான எஸ்.வி.சேகர், தனது முகநூல் பக்கத்தில் பெண் நிருபர்கள் குறித்து தரக்குறைவாக ஒரு பதிவை வெளியிட்டார்.

இதற்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்ததைத் தொடர்ந்து, அந்த பதிவை அவர் நீக்கினார். இதனைத் தொடர்ந்து, ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் எஸ்.வி. சேகருக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.

பெண் பத்திரிகையாளர்கள் பற்றி வெளியிட்ட அவரின் கருத்துக்காக எஸ்.வி சேகர் மன்னிப்பு கோரியுள்ளார். “மன வருத்தம் ஏற்பட்டுள்ள பத்திரிகை சகோதரிகளிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

இந்நிலையில், தரக்குறைவாகப் பேசிய எஸ்.வி. சேகர் மீது மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

பத்திரிகையாளர் பாதுகாப்பு நல சங்கத்தினரின் புகாரின் பேரில், பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading எஸ்.வி. சேகர் மீது மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் வழக்கு பதிவு Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - 100 கோடி - 24 வயது... ஒரு துறவியின் கதை

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்