ஆளுங்கட்சியோ, எதிர்கட்சியோ கொஞ்சம் கூட பயம் இல்ல.. இப்படியும் ஒரு கலெக்டர் தெரியுமா மக்களே!

சம்பவம் 2019ல் நடந்தது. அப்போது மதுரை மாவட்ட கலெக்டராக இருந்தவர் நாகராஜன் என்பவர். இவரின் பணிக்காலத்தில் இவர் மதுரை கலெக்டர் பணியில் இருந்து மாற்றப்படுவதற்கான ஆர்டர் வந்தது. ஆளுங்கட்சியின் அழுத்தம் காரணமாக இந்த மாறுதல் வந்ததாக அப்போது கூறப்பட்டது. காரணம் அங்கன்வாடி பணியாளர்கள் நியமனத்தில் இவர் அரசின் பேச்சை கேட்கவில்லை என்று கூறப்பட்டது.

அதன்படி மாறுதல் ஆணை வந்து வேறு இடத்துக்கு மாறப்போகும் கடைசி நாளில் இரவோடு இரவாக ஒரு அதிரடி உத்தரவை பிறப்பித்தார் கலெக்டர் நாகராஜன். மதுரை மாவட்ட கலெக்டர் நாகராஜ் தான் மாற்றப்பட போகிறோம் என்பதை அறிந்தவர் ..இரவோடு இரவாக சிபாரிசுகளை புறந்தள்ளிவிட்டு மாற்றுத்திறனாளிகள் மற்றும் விதவைகள், ஆதரவற்றோருக்கு சத்துணவு, அங்கன்வாடி பணிகளை ஒதுக்கி அவர்களது வீடுகளுக்கே பணிநியமன ஆணையை வழங்கினார். ஆளுங்கட்சியின் எதிர்ப்புக்கு கொஞ்சம் கூட பணியாமல் இதனை மேற்கொண்டார் நாகராஜன்.

அப்போது மட்டுமல்ல, இவர் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியராக இருந்தபொழுதும்,இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியராக இருந்தபொழுதும் இதையே செய்தார். சமீபத்தில் தேர்தலுக்கு முன்பாக கோவை கலெக்டர் ராஜாமணி தொடர்பாக புகார் எழுந்தபோது தேர்தல் ஆணையம் முதலில் தேர்வு செய்த நபர் கலெக்டர் நாகராஜன் தான். ஆம், நேர்மையை இவருக்கு கிடைக்கும் வெகுமதி. அதனால் செல்கின்ற இடத்தில் எல்லாம் நல்ல பெயர் எடுத்து வருகிறார்.

You'r reading ஆளுங்கட்சியோ, எதிர்கட்சியோ கொஞ்சம் கூட பயம் இல்ல.. இப்படியும் ஒரு கலெக்டர் தெரியுமா மக்களே! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - சாவில் தான் எத்தனை கொடுமை மக்களே!... இது தென்காசி துயரம்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்