தமிழகத்தில் ஆட்சி அமைப்பது யார்? திமுக முன்னிலை

தமிழ்நாடு, கேரளா, அஸ்ஸாம், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களிலும் யூனியன் பிரதேசமான புதுச்சேரியிலும் நடைபெற்ற தேர்தல்களின் வாக்குப் பதிவு எண்ணிக்கை தொடங்கியுள்ளது.

தமிழ்நாட்டில் ஆட்சியை பிடிப்பதற்கு 118 இடங்களில் வெற்றி பெற வேண்டும். கேரளாவில் 71 இடங்களிலும் அஸ்ஸாமில் 64 இடங்களிலும் மேற்கு வங்காளத்தில் 148 இடங்களிலும் புதுச்சேரியிலும் 16 இடங்களிலும் வெற்றி பெற வேண்டும்.

காலை 8:30 மணி நிலவரப்படி முதற்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான அணியும், கேரளாவில் கம்யூனிஸ்ட் அணியும் மேற்கு வங்காளத்தில் இழுபறி நிலையும் அஸ்ஸாமில் பாஜக கூட்டணியும், புதுச்சேரியில் என்ஆர்சி காங்கிரஸ் தலைமையிலான அணியும் முன்னிலையில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

You'r reading தமிழகத்தில் ஆட்சி அமைப்பது யார்? திமுக முன்னிலை Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - கொரோனா பெருந்தொற்று: ஆரோக்கியத்துடன் இவற்றையும் கவனியுங்கள்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்