காவிரி விவகாரத்தில் சித்து விளையாட்டு நடக்கிறது - துரைமுருகன்

காவிரி விவகாரத்தில் தற்போது நடப்பது சித்து விளையாட்டு - துரைமுருகன்

காவிரி விவகாரத்தில் தற்போது நடப்பது சித்து விளையாட்டு என்று திமுக முதன்மை செயலாளர் துரைமுருகன் கூறினார்.

காவிரி விவகாரத்தில், 14 பக்கங்கள் கொண்ட வரைவு திட்ட அறிக்கையை மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. இதற்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள், விவசாயிகள் அமைப்புகளிடையே ஆதரவும் எதிர்ப்பும் வலுத்து வருகிறது.

இது குறித்து கருத்து தெரிவித்து திமுக முதன்மை செயலாளர் துரைமுருகன், காவிரி விவகாரத்தில் மத்திய மாநில அரசுகள் நாடகமாடுவதாக குற்றம் சாட்டினார். காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது மத்திய அரசின் கடமை என்றும், அதை செய்ய தவறும் பட்சத்தில் அறிவுறுத்துவது உச்ச நீதிமன்றத்தின் வேலை என்றும் அவர் கூறியுள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விசயத்தில் தமிழகத்துக்கு பெரிய இழப்பு ஏற்பட போவதாக துரைமுருகன் தெரிவித்துள்ளார். எனவே, இந்த குறித்து விவாதிக்க தமிழக அரசு உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading காவிரி விவகாரத்தில் சித்து விளையாட்டு நடக்கிறது - துரைமுருகன் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - பள்ளிப் பாடப் புத்தகங்களில் இத்தனை தவறுகளா?

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்