காவிரி விவகாரம்... அனைத்து கட்சி கூட்டத்திற்கு திமுக அழைப்பு!

அனைத்து கட்சி கூட்டத்திற்கு திமுக அழைப்பு!

காவிரி விவகாரம் குறித்து நாளை அனைத்து கட்சி கூட்டம் நடத்துவதற்கு திமுக அழைப்பு விடுத்துள்ளது.

நூற்றாண்டுகளைக் கடந்தும் காவிரி பிரச்சனை இன்னும் ஓய்ந்தபாடில்லை. தமிழகம், கேரளம், கர்நாடகம், புதுச்சேரி உள்ளிட்ட நான்கு மாநிலங்களும் தண்ணீருக்காக மல்லுக்கட்டி வருகின்றன.

அண்மையில், காவிரி விவகாரத்தில் மேலாண்மை ஆணையம் அமைக்கப்படும் என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு வரைவு திட்டத்தை தாக்கல் செய்திருந்தது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் வரவேற்பும், எதிர்ப்பும் தெரிவித்திருந்தனர்.

இதனிடையே, நாளை அனைத்துக்கட்சி கூட்டம் நடத்த மற்ற கட்சிகளுக்கும், விவசாய அமைப்புகளுக்கும் திமுக அழைப்பு விடுத்துள்ளது. திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் காலை 10 மணிக்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்த கூட்டத்தில், காவிரி விவகாரத்தில் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, காவிரி பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு கோரி திமுக தலைமையில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

ஆனால், திமுக-வின் இந்த போராட்டத்தை பொய் நாடகம் என ஆளும் அதிமுக கட்சியினர் விமர்சித்திருந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாகவே தற்போதைய அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு திமுக அழைப்பு விடுத்திருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading காவிரி விவகாரம்... அனைத்து கட்சி கூட்டத்திற்கு திமுக அழைப்பு! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ஹவாய் எரிமலையில் புதிய வெடிப்பு... அச்சத்தில் பொதுமக்கள்!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்