கோயில் கடைகள்... டிசம்பர் 31 வரை அவகாசம் - உயர் நீதிமன்றம்

கோயில் கடைகளை அகற்ற டிசம்பர் 31 வரை அவகாசம்

தமிழக கோயில்களில் உள்ள கடைகளை அகற்ற டிசம்பர் 31ஆம் தேதி வரை சென்னை உயர்நீதிமன்றம் அவகாசம் வழங்கியுள்ளது.

புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் கடந்த பிப்ரவரி மாதம் தீ விபத்து ஏற்பட்டது. இதனை தொடர்ந்து, கோயில் வளாகத்தில் உள்ள கடைகளை அகற்ற உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு பிறப்பித்தது.

அதன்படி முக்கிய கோயில் தலங்களில் உள்ள கடைகள் அகற்றப்பட்டன. முன்னறிவிப்பின்றி அகற்றப்பட்ட கடைகளால் உரிமையாளர்கள் பாதிக்கப்பட்டனர். இதனையடுத்து கடைகளை மூடும் உத்தரவை எதிர்த்து, உரிமையாளர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பாரதிதாசன், கோயிலில் உள்ள கடைகளை அகற்ற டிசம்பர் 31ஆம் தேதி வரை அவகாசம் வழங்கினார். மேலும், மாற்றும் இடம் கோரி அடுத்த 4 வாரத்திற்குள் கடையின் உரிமையாளர்கள் விண்ணப்பித்தால், அதை அரசு உடனடியாக பரிசீலிக்க வேண்டும் எனவும் ஆணையிட்டுள்ளார்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading கோயில் கடைகள்... டிசம்பர் 31 வரை அவகாசம் - உயர் நீதிமன்றம் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - எம்.ஜி.ஆர். 100 வது பிறந்த நாளையொட்டி 67 கைதிகள் விடுதலை 

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்