காலா - ரஜினி ரசிகர்களுக்கு ஓர் நற்செய்தி!

ரஜினி ரசிகர்களுக்கு ஓர் நற்செய்தி!

ரஜினியின் காலா திரைப்படம் திட்டமிட்டப்படி நாளை கர்நாடகா மாநிலத்தில் வெளியாகவுள்ளது.

காலா திரைப்படம் உலகமெங்கும் நாளை வெளியாகிறது. ஆனால், கர்நாடகா மாநிலத்தில் வெளியிடக் கூடாது என சில கன்னட அமைப்புகள் முரண்டு பிடித்தன.

இந்நிலையில் இன்று காலை பேசிய ரஜினிகாந்த், காலா படம் வெளியிட உதவுமாறு கன்னட மொழியில் உருக்கமான கோரிக்கை வைத்தார்.

இந்நிலையில், நாளை திட்டமிட்டப்படி கர்நாடகா மாநிலத்தில் காலா திரைப்படம் வெளியாகும் என படத்தின் விநியோகஸ்தர் அறிவித்துள்ளார்.

'சி' நிறுவன உரிமையாளர் கனகபுரா சீனிவாஸ் கூறியதாவது, “சுமார் 130 திரையரங்குகளில் காலா படத்தை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக” தகவல் தெரிவித்துள்ளார். கர்நாடகா உயர் நீதிமன்ற உத்தரவின்படி, அந்த திரையரங்களுக்கு மாநில அரசு பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading காலா - ரஜினி ரசிகர்களுக்கு ஓர் நற்செய்தி! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - '2019 தான் குறிக்கோள்!’- புதிய திட்டங்களுடன் மோடி!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்