சேலத்தில் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்த மாணவி கைது!

விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்த மாணவி கைது!

சேலத்தில் எட்டு வழி சாலை அமைப்பதற்காக விவசாய நிலத்தை கையகப்படுத்த கூடாது என விவசாயிகள் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

அங்கு, விவசாயிகளுக்கு ஆதரவாக இருந்த கல்லூரி மாணவி வளர்மதியை காவல்துறையினர் கைது செய்தனர்.

சேலம்-சென்னை எட்டு வழி பசுமை சாலைக்கான நிலம் அளவீடு செய்யும் பணி 2-ஆம் நாளாக இன்று நடைபெற்று வருகின்றது.

இன்று தனி வட்டாட்சியர் வெங்கடேசன் தலைமையில் ஆச்சாங்குட்டை பட்டி பகுதியில் நிலம் அளவீடு செய்யும் பணி நடைபெற்றது.

அந்த பகுதியில் திரண்ட விவசாயிகள், தங்கள் விவசாய நிலங்களை கையகப்படுத்த வேண்டாம் என்று கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தனர்.

அப்போது, காவல்துறையினருக்கும் விவசாயிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்க வந்த கல்லூரி மாணவி வளர்மதியை போலீசார் கைது செய்தனர்.

இதேபோல, சில தினங்களுக்கு முன்னர் சமூக ஆர்வலர் பியூஸ் மானூஷ் கைது செய்யப்பட்டார் எனபது குறிப்பிடத்தக்கது.

You'r reading சேலத்தில் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்த மாணவி கைது! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - கொடியேற்றத்துடன் தொடங்கியது நெல்லையப்பர் கோவில் ஆனித் திருவிழா!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்