2-வது பிரசவத்திற்கும் விடுமுறை உண்டு - தமிழக அரசு!

அரசு பெண் ஊழியர்களுக்கு இரண்டாவது பிரசவத்திற்கு மகப்பேறு விடுமுறை

அரசு பெண் ஊழியர்களுக்கு, இரண்டாவது பிரசவத்திற்கு மகப்பேறு விடுமுறை உண்டு என, தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

அரசு பெண் ஊழியர்கள் மற்றும் ஆசிரியைகள் பிரசவ கால விடுமுறை கடந்த 2016-ம் ஆண்டு 180 நாட்களில் இருந்து 270 நாட்களாக, அதாவது 9 மாதங்களாக தமிழக அரசு உயர்த்தியது.

ஆனாலும், முதல் பிரசவத்தில் இரட்டை குழந்தை பிறந்தால் 2-வது பிரசவத்துக்கு அரசு விடுமுறை வழங்கப்படவில்லை. இதுபற்றி பல பெண் ஊழியர்கள் நீதிமன்றத்துக்கு சென்று முறையிட்டனர்.

நீதிமன்றமும் 2-வது பிரசவத்துக்கு அரசு 270 நாட்கள் விடுமுறை வழங்கலாம் என்று உத்தரவிட்டது.

இது குறித்து தமிழக பணியாளர் மற்றும் நிர்வாக துறை செயலாளர் ஸ்வர்ணா வெளியிட்டுள்ள அரசு உத்தரவில், ‘முதல் பிரசவத்தில் இரட்டை குழந்தை பெற்றவர்கள், 2-வது பிரசவத்துக்கும் அரசு விடுமுறையான 270 நாள் எடுத்துக்கொள்ள அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக’ அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

You'r reading 2-வது பிரசவத்திற்கும் விடுமுறை உண்டு - தமிழக அரசு! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ரொமன்ட்டிக் சிஇஓ - சீட்டைக் கிழித்தது இன்டெல்!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்