இந்த ஆளுநருக்கு என்ன அதிகாரம் இருக்கிறது?- கொந்தளிக்கும் வைகோ

”ஆளுநர் தன் அதிகாரத்துக்கும் மீறிய செயல்களைச் செய்து வருகிறார்” என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றம் சுமத்தியுள்ளார்.

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தான் பதவியேற்ற நாளிலிருந்தே தனது நடவடிக்கைகளால் தமிழக எதிர்கட்சிகளின் கண்டனங்களுக்குத் தொடர்ந்து உள்ளாகி வருகிறார்.

தமிழகத்தில் திடீரென ஒரு மாவட்டத்தைத் தேர்ந்தெடுத்து அங்கு ஆட்சியர் அலுவலகம் முதல் ஊராட்சி வரையில் ஒரு இடத்துக்குச் சென்று நேரடியாக ஆய்வு செய்து வருகிறார். இதுவரையில் எந்த ஒரு ஆளுநரும் ஈடுபடாத செயல்களில் எல்லாம் தலைகொடுத்து வருகிறார் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்.

கோவையில் முதன்முதலாகத் தொடங்கிய ஆய்வு நடவடிக்கைகள் தற்போது நாமக்கல் வரையில் வந்துள்ளது. இதற்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறுகையில், “அதிகாரிகளை அழைத்து ஆளுநர் விவாதிப்பது அவரது எல்லையை கடந்த செயலாகும் அமெரிக்காவில்தான் ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது.

அந்த அதிகாரம் இந்தியாவில் இல்லை தொழில் முனைவோர் தன்னை சந்திக்கலாம் என்ற ஆளுநருக்கு எந்த சட்டப்பிரிவில் அதிகாரம் உள்ளது?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

You'r reading இந்த ஆளுநருக்கு என்ன அதிகாரம் இருக்கிறது?- கொந்தளிக்கும் வைகோ Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - வடமாநிலங்களில் வெளுத்துவாங்கும் கனமழை: பொதுமக்கள் வீடுகளில் தஞ்சம்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்