கருத்துரிமையை பறிக்கும் கைது நடவடிக்கை - இயக்குநர் அமீர்

பொதுமக்கள், விவசாயிகள் ஆதரவு போராட்டத்திற்கு எதிராக கைது நடவடிக்கைகள் கருத்துரிமையை பறிக்கும் செயல் என இயக்குநர் அமீர் தெரிவித்துள்ளார்.

கோவையில் கடந்த 9 ஆம் தேதி நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற இயக்குநர் அமீருக்கும், பா.ஜ.க மாநிலத்தலைவர் தமிழிசைக்கு கருத்து மோதல் ஏற்பட்டது. இதில் பா.ஜ.கவினர் இயக்குநுர் அமீர் கார் மீது தாக்குதல் நடத்தினர். இதையடுத்து கோவை பீளமேடு போலீசார், வன்முறையை தூண்டும் வகையில் பேசுதல் உள்பட 2 பிரிவுகளில் அமீர் மீது வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் ஜாமின் வழங்கக் கோரி அமீர் தாக்கல் செய்த மனு கோவை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

மனுவை விசாரித்த நீதிபதி சஞ்சய் பாபா அமீருக்கு ஜாமின் வழங்கினார். பின்னர் பேசிய இயக்குநர் அமீர், "சமீபத்திய அனைத்து கைது நடவடிக்கைகள் கருத்துரிமையை பறிக்கும் செயல். இந்த கைதுகள் அனைத்தையுமே நீதிமன்றங்கள் ஏற்பது இல்லை. நீதி மன்றத்தில் இருந்து நமக்கு நீதி பக்கமாக இருக்கிறது என்று பெருமைப்பட்டு கொள்வதை தவிர வேறு வழி இல்லை" என்றார்.

You'r reading கருத்துரிமையை பறிக்கும் கைது நடவடிக்கை - இயக்குநர் அமீர் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ஜெயலலிதா நினைவிடம்... மத்திய அரசு அனுமதி தேவையில்லை...

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்