டிஜிபி அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!

டிஜிபி அலுவலகத்தில் வெடிகுண்டு?

சென்னை மெரினா கடற்கரை சாலையில் தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் (டிஜிபி) அலுவலகம் உள்ளது.

பாதுகாப்பு மிகுந்த இந்த அலுவலத்திற்குள் வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

காவல்துறையின் கட்டுப்பாட்டு அலுவலகத்திற்கு தொலைபேசியில் பேசிய மர்மநபர் ஒருவர் அங்கே வெடிகுண்டு வைத்திருப்பதாக கூறிவிட்டு தொடர்பை துண்டித்தார்.

இந்நிலையில், காவல்துறையினர் உஷார்படுத்தப்பட்டு, டிஜிபி அலுவலகத்தில் சோதனை செய்யப்பட்டது.

மேலும், மிரட்டல் விடுத்த நபர் பேசிய தொடர்பு எண்ணை வைத்து, அந்த நபரை அடையாளம் காண விசாரணை நடைபெற்று வருகின்றது.

You'r reading டிஜிபி அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - மந்திரங்களை உச்சரித்தால் விளைச்சல் அதிகரிக்கும் - அமைச்சரின் அடடே கருத்து

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்