ஈரோடு, தஞ்சை, கரூர் மாவட்ட மக்களுக்கு எச்சரிக்கை!

ஈரோடு, தஞ்சை, கரூர் ஆகிய மூன்று மாவட்ட மக்களுக்கு அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மேட்டூர் அணை தன்னுடைய 120 அடி கொள்ளவை எட்ட உள்ளதால் அணையில் இருந்து இன்று மாலையிலிருந்து நீர் திறந்து விடப்பட உள்ளது. மேட்டூர் அணை அதனது முழு கொள்ளவை எட்ட உள்ள நிலையில் சேலம் மாவட்டத்தில் இன்று காலை மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டது.

இதையடுத்து,  பவானி ஆற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளதால் கரையோர மக்கள் பாதுகாப்பான இடத்தில் இருக்குமாறு ஈரோடு மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். மேலும், மேட்டூர் அணையில் இருந்து படிப்படியாக 1,000 கனஅடி நீர் திறக்கப்பட உள்ளதால் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க சேலம் மாவட்ட ஆட்சியர் ரோஹிணி அறிவுறுத்தி உள்ளார்.

கூடுதலாக மேட்டூர் அணையில் இருந்து கிழக்கு, மேற்கு கரை கால்வாய்களில் இன்று இரவு 8 மணிக்கு 200 கனஅடி தண்ணீர் திறக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார். கல்லணையில் அதிகளவு நீர் திறப்பால் காவிரி ஆற்றை பொதுமக்கள் கடந்து செல்ல வேண்டாம். காவிரி ஆற்றில் குளிக்கவோ, இறங்கவோ கூடாது என தஞ்சை ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

You'r reading ஈரோடு, தஞ்சை, கரூர் மாவட்ட மக்களுக்கு எச்சரிக்கை! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - மதுரையில் பாஜக மகளிரணி தமிழ் மகள் தாமரை மாநாடு!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்