சொத்து வரி உயர்வு...உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு...

சொத்து வரி 100 சதவீதம் உயர்த்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. 
 
தமிழகத்தில் கடந்த 1998ம் ஆண்டு முதல் சொத்து வரி உயர்த்தப்படாமல் இருந்தது. இதுதொடர்பாக நடத்தப்பட்ட வழக்கு விசாரணையில் சொத்து வரி உயர்த்த அனுமதி வழங்கப்பட்டது.இதையடுத்து, தமிழகம் முழுவதும் 100 சதவீதம் வரை சொத்து வரியை உயர்த்தி அரசு அரசாணை பிறப்பித்தது. 
 
குறிப்பாக, பெருநகர சென்னை மாநகராட்சி, மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல், குடியிருப்பு கட்டிடங்களுக்கு 50 சதவீதமும், வாடகை குடியிருப்பு கட்டிடங்களுக்கு 100 சதவீதமும், குடியிருப்பு அல்லாத கட்டிடங்களுக்கு 100 சதவீதமும் சொத்துவரி மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
 
இதற்கு  அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், சொத்து வரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரை சேர்ந்த எம்.எம்.ரமேஷ் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
 
சொத்து வரி உயர்வால் வாடகை வீட்டில் தங்கியிருப்பவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். எனவே, சொத்து வரி உயர்வு தொடர்பான அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது. 
 
இந்த வழக்கு ஓரிரு தினங்களில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
 
 

You'r reading சொத்து வரி உயர்வு...உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு... Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - பன்னீர்செல்வம் பா.ஜ.க சேவகர்- தினகரன் ஆவேசம்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்