தேசிய மருத்துவ ஆணைய மசோதா... ஜி.கே.வாசன் எதிர்ப்பு

தேசிய மருத்துவ ஆணைய மசோதாவுக்கு ஜி.கே.வாசன் எதிர்ப்பு

இந்திய மருத்துவ சங்கத்திற்கு எதிராக தேசிய மருத்துவ ஆணைய மசோதாவை கொண்டுவர மத்திய அரசு முயற்சிக்க கூடாது என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக ஜி.கே.வாசன் வெளியிட்ட அறிக்கையில், “மத்திய அரசு தேசிய மருத்துவ ஆணையத்தை கொண்டுவர முயற்சிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஏற்கெனவே மருத்துவ மனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டிருப்பவர்களுக்கும் சிகிச்சை அளிப்பதில் தடை ஏற்பட வாய்ப்புண்டு. எனவே, மருத்துவர்களின் போராட்டத்திற்கும், பொதுமக்கள் பாதிக்கப்படுவதற்கும் மத்தியஅரசு தான் காரணம்.

எனவே, தன்னிச்சையாக சதி திட்டதோடு தேசிய மருத்துவ ஆணைய மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு முயற்சிக்கக் கூடாது.

மத்திய அரசு மாநில உரிமைகள், ஜனநாயக மரபு ஆகியவற்றிற்கு பாதகம் ஏற்படாமல் இருக்க, மருத்துவ சங்கம் விடுத்துள்ள கோரிக்கையை ஏற்று செயல்பட வேண்டும்.” என்று அந்த அறிக்கையில் வாசன் குறிப்பிட்டுள்ளார்.

You'r reading தேசிய மருத்துவ ஆணைய மசோதா... ஜி.கே.வாசன் எதிர்ப்பு Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - 500 அடி பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து; 33 பேர் பலி

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்