கருணாநிதி நலமாக இருக்கிறார் என அறிவிப்பு!

கருணாநிதியின் உடல்நிலை

வதந்திகளை நம்ப வேண்டாம் கருணாநிதி நலமாக இருக்கிறார் என தெரிவிக்கப்பட்டதை அடுத்து, காவேரி மருத்துவமனைக்கு முன்பாகத் திரண்டிருந்த ஒருபகுதி தொண்டர்கள் அங்கிருந்து கலையத் தொடங்கியுள்ளனர். அத்துடன் அங்கிருக்கும் மற்ற தொண்டர்கள் மருத்துவமனைக்கு வரும் வாகனங்களுக்கு வழிவிட்டு ஓரமாக நிற்கின்றனர்.

••••••••••••

முன்னாள் மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷித் காவேரி மருத்துவமணைக்கு வருகை தந்துள்ளார்.

•••••••••••

அண்ணா பல்கலைக் கழகத்தின் உறுப்பு கல்லூரிகளுக்கு இன்று விடுப்பு அறிவித்ததாக வெளியான தகவலை அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் கணேசன் மறுத்துள்ளார்.

••••••••••••

ஆ.ராசா, ஏ.வ.வேலு ஆகியோர் காவேரி மருத்துவமனைக்கு மீண்டும் வருகை தந்துள்ளனர்.

••••••••••••

வாழ்க வாழ்க வாழ்கவே... தலைவர் கலைஞர் வாழ்கவே... என்றும் எழுந்துவா.. எழுந்துவா.. எங்கள் தலைவா எழுந்துவா என்றும், காவேரி மருத்துவனைக்கு முன்பாகத் திரண்டிருக்கும் திமுக தொண்டர்கள் தொடர்ந்து முழக்கம் எழுப்பி வருகின்றனர்.

••••••••••••

காவேரி மருத்துவமனை காவல்துறையினர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

••••••••••••

கருணாநிதியின் உடல்நிலை சீராக இருப்பதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அத்துடன் காவல்துறையினருக்கு ஒத்துழைப்பு தருமாறு தொண்டர்களுக் வேண்டுகோள் அறிக்கை விடுத்துள்ளார்.

•••••••••••••

கோபாலபுரம் மற்றும் தேனாம்பேட்டை பகுதிகளில் துணை ராணுவப்படையினர் குவிப்பு.

•••••••••••••

காவேரி மருத்துவமனையில் இருந்து புறப்பட்டார் மு.க.அழகிரி

•••••••••••••

கோபாலபுரம் செல்லும் அனைத்து வழித்தங்களிலும் காவல்துறையினர் குவிப்பு

•••••••••••••

காவேரி மருத்துவமனைக்கு அருகில் திரண்டுள்ள திமுக தொண்டர்கள் கதறல், கருணாநிதி உடல்நலம் பெறவேண்டும் என்று முழக்கமிட்டு வருகின்றனர்.

•••••••••••••

கருணாநிதியின் உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை தகவல்

•••••••••••••

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோவையில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு திரும்புகிறார்.

••••••••••••••

காவேரி மருத்துவமனையில் இருந்து தொண்டர்கள் கலைந்து செல்லுமாறு காவல்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.

•••••••••••••••

காவேரி மருத்துவனையில் இருந்து திமுக தலைவர் கருணாநிதியின் கோபாலபுரம் இல்லம் வரையில் காவல்துறையினர் குவிப்பு.

•••••••••••••••

மருத்துவமனையில் இருந்து புறப்பட்டார் மு.க.ஸ்டாலின்

•••••••••••••••

காவேரி மருத்துவமனைக்கு முன்பாக திரண்டிருந்த, திமுக தொண்டர்கள் மீது காவல்துறையினர் தடியடி

•••••••••••••••

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை சீராக இருப்பதாக ஆ.ராசா தகவல் தெரிவித்துள்ளார்.

You'r reading கருணாநிதி நலமாக இருக்கிறார் என அறிவிப்பு! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - பாகிஸ்தான் பொது தேர்தல்... வெற்றி பெற்ற முதல் இந்து வேட்பாளர்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்