ஜெ. வீடியோவை சரவணா ஸ்டோர்ஸ் பொம்மையுடன் ஒப்பிட்ட எஸ்.வி.சேகர்!

இந்த வீடியோவை பார்க்கும்போது ஒருபுறம் பரிதாபமாக இருந்தாலும் சரவணா ஸ்டோர்ஸ் வாசலில் கும்பிடும் பொம்மை ஞாபகம் வருகிறது என்று பாஜக பிரமுகர் எஸ்.வி.சேகர் தெரிவித்துள்ளார்.

இந்த வீடியோவை பார்க்கும்போது ஒருபுறம் பரிதாபமாக இருந்தாலும் சரவணா ஸ்டோர்ஸ் வாசலில் கும்பிடும் பொம்மை ஞாபகம் வருகிறது என்று பாஜக பிரமுகர் எஸ்.வி.சேகர் தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா மரணம் குறித்து பல்வேறு தரப்பினரும் சந்தேகம் எழுப்பியிருந்த நிலையில், ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது எடுத்த வீடியோ ஒன்றை தகுநீக்கம் செய்யப்பட்ட தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ வெற்றிவேல் வெளியிட்டார். இது குறித்து பலரும் பலவிதமான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ள பாஜக பிரமுகர் எஸ்,வி,சேகர், “இந்த வீடியோவை பார்க்கும்போது ஒருபுறம் பரிதாபமாக இருந்தாலும் சரவணா ஸ்டோர்ஸ் வாசலில் கும்பிடும் பொம்மை ஞாபகம் வருவதை தடுக்க முடியவில்லை.

அதிமுகவின் உச்ச கட்ட அனாகரீக அரசியல் போர். இழப்பு ஆட்சிக்கும் கட்சிக்கும் சேர்த்து அடிக்கப்படும் சாவு மணி. மொத்தமா முடிச்சாச்சு” என தெரிவித்துள்ளார்.

You'r reading ஜெ. வீடியோவை சரவணா ஸ்டோர்ஸ் பொம்மையுடன் ஒப்பிட்ட எஸ்.வி.சேகர்! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - பாஜகவின் நாடாளுமன்ற குழு கூட்டத்தில் மயங்கி விழுந்த மத்திய அமைச்சர்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்