நீலகிரியில் 6000 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்பு!

6000 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்பு

யானை வழிப்பாதையை ஆக்கிரமித்த 29 எஸ்டேட்டுகளின் பிடியில் இருந்து 6000 ஏக்கர் நிலங்கள் மீட்கப்பட்டதாக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

வண்டலூரில் மரப்பூங்கா திறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பின்னர் பேசிய அமைச்சர் சீனிவாசன், அந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ள சாராம்சம் விரைவில் வெளியிடப்படும் எனக் கூறினார்.

“நீலகிரி மாவட்டத்தில், யானை வழிப்பாதையை ஆக்கமிரத்த 29 எஸ்டேட்டுகளின் பிடியில் இருந்து, 6000 ஏக்கர் நிலங்கள் மீட்கப்பட்டது. அதேபோல, காஞ்சிபுரம் மாவட்டம் காயிதே மில்லத் கல்லூரியில், 20 ஏக்கர் நிலம் பல கோடி மதிப்பிலான வனத்துறை நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தன.”

“அவற்றையும் அரசு மீட்டுள்ளது. 125 விதமான மரக்கன்றுகள் இங்கு உள்ளது... 15 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும்..45 ஆயிரம் செடிகள் விற்பனைக்கு தயாராக உள்ளது" எனஅமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறினார்.

“வண்டலூர் உயிரியல் பூங்காவில், காண்டாமிருகம், பாட்னா உயிரியல் பூங்காவில் இருந்து கொண்டுவரப்படவுள்ளது.மத்திய உயிரியல் பூங்காவின் அனுமதிக்காக காத்திருக்கிறோம். இரண்டு மாதங்களில் வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு உயிரி பரிமாற்றம் திட்டத்தில் , காண்டாமிருகம் கொண்டுவரப்படும்" என அமைச்சர் தெரிவித்தார்.

You'r reading நீலகிரியில் 6000 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்பு! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - வண்டலூரில் மரப்பூங்கா திறப்பு... சிங்கார சென்னைக்கு புதிய வரவு

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்