பிரபல கட்டுமான நிறுவனத்தில் ஐடி ரெய்டு

பிரபல தனியார் கட்டுமான நிறுவன அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் சோதனை

சென்னை திருவான்மியூரில் உள்ள பிரபல தனியார் கட்டுமான நிறுவன அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடைபெற்றது.

சென்னையில் பிரபல கட்டுமான நிறுவனம் (காஸா க்ராண்ட்) செயல்பட்டு வருகிறது. சென்னை முழுவதும் ஆயிரம் கோடிகளுக்கு மேல் கட்டுமான வேலைகள் நடைபெற்றது.

இந்த நிறுவனத்தின் கிளை நிறுவனம் assets properties என்ற பெயரில் பெங்களூரை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிறது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு பெங்களூருவில் நடந்த வருமானவரித்துறை சோதனை அடிப்படையில் பெங்களூரு வருமான வரித்துறை அதிகாரிகள் சென்னையில் சோதனையை நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இன்று காலை முதல் 500க்கும் மேற்பட்ட வருமானவரித்துறை அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டனர். அந்த கிளை நிறுவனத்தின் ஆவணங்கள் எதுவும் இங்கு வைக்கப்பட்டுள்ளதா என்பது குறித்தும் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர்.

You'r reading பிரபல கட்டுமான நிறுவனத்தில் ஐடி ரெய்டு Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - பசுமை வழிச்சாலை... உயர் நீதிமன்றம் இடைக்கால தடை

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்