ஏத்தி ஏத்தி ஏத்தி.... ஸ்டைல கொஞ்சம் மாத்திய முதலமைச்சர்!

உடற்பயிற்சிகூடத்தை திறந்து வைத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி

சேலம் அருகே 30 லட்சம் மதிப்பில் பூங்கா, உடற்பயிற்சிகூடத்தை திறந்து வைத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, சிறிது நேரம் உடற்பயிற்சி செய்தார்.

சேலம் அருகே அனுப்பூர் கிராமத்தில் 30 லட்ச ரூபாய் மதிப்பில் அம்மா பூங்கா, அம்மா உடற்பயிற்சி கூடம் அமைக்கப்பட்டுள்து. இதன் திறப்பு இன்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உடற்பயிற்சி கூடத்தை திறந்து வைத்து அங்கு உடற்பயிற்சி மேற்கொண்டார்.

பின்னர் கட்சி நிகழ்வு ஒன்றில் பங்கேற்று பேசிய முதலமைச்சர், "நானும் விவசாயி என்பதால் விவசாயம் எவ்வுளவு கடினமானது என்பதை நன்கு அறிவேன். விவசாயி செழிப்போடு இருந்தால் தான் நாடு செழிப்படையும்."

"விவசாயிகளுக்கு தேவையான அனைத்து திட்டங்கள் வகுத்து தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. வேளாண், கல்வி தமிழக அரசின் இரு கண்கள்" என தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து கருமந்துறையில், எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நினைவு வளைவை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.

அங்கிருந்து சின்னக்கல்வராயன் பகுதியில் வசிக்கும் மலைவாழ் மக்களை சந்தித்து, அவர்களது நிறை குறைகளை முதலமைச்சர் கேட்டறிந்தார். மலைகிராமத்தில் நடந்த விழாவில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மலைவாழ் மக்களுக்கு பசுமை வீடுகள் கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

"மலைவாழ் மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த ரூ.104.76 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.மேலும் ஒருங்கிணைந்த பழங்குடியினர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.50 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் கல்வராயன் மலைப்பகுதியை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்." என முதலமைச்சர் கூறினார்.

You'r reading ஏத்தி ஏத்தி ஏத்தி.... ஸ்டைல கொஞ்சம் மாத்திய முதலமைச்சர்! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - தவறான அறுவை சிகிச்சை... தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்