1 முதல் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு புத்தகங்கள் தயார்

பள்ளி மாணவர்களுக்கு புத்தகங்கள் தயார்

1 முதல் 9 ஆம் வகுப்பு வரை மற்றும் பிளஸ் ஒன் மாணவர்களுக்கு, இரண்டாம் பருவத்திற்கான பாட புத்தகங்கள் தயார் நிலையில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

1 முதல் 9 ம் வகுப்பு வரை முப்பருவ கல்வி முறை அமலில் இருக்கிறது. அதன்படி, அக்டோபர் முதல் 2 ம் பருவம் துவங்குகிறது. இதையடுத்து, அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளி மாணவர்களுக்காக, 1.34 கோடி இலவச பாட புத்தகங்களும், தனியார் பள்ளி மாணவர்களுக்காக விற்பனை பிரதிகள் 78 லட்சம் புத்தகங்களும் தயாராகி உள்ளன.

இந்த புத்தகங்கள் இம்மாத இறுதியில் பள்ளிகளுக்கு அனுப்பப்படும் எனவும், அக்டோபர் 3ஆம் தேதி பள்ளிகள் திறந்ததும், அரசு பள்ளி மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கப்படும் எனவும், பாடநுால் கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேபோல், 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு, நடப்பாண்டில் புதிய பாடத்திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. அறிவியல், கணிதம் போன்ற பாடங்களுக்கு, முதல் தொகுதி பாடப்புத்தகம் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, இரண்டாம் தொகுதியாக, அரசு பள்ளி மாணவர்களுக்கு 75.30 லட்சம் புத்தகங்களும், தனியார் பள்ளி மாணவர்களுக்காக 30.73 லட்சம் புத்தகங்களும் அச்சிடப்பட்டுள்ளன. இந்த புத்தகங்களும் விரைவில் பள்ளிகளுக்கு அனுப்பப்பட இருக்கின்றன.

You'r reading 1 முதல் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு புத்தகங்கள் தயார் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - தடையை மீறி சென்னையில் ஹூக்கா பார் நடத்திய 2 பேர் கைது

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்