சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட தமிழக அரசு தயாரா? ஸ்டாலின் கேள்வி

மின் துறையில் ஊழல் - மு.க.ஸ்டாலின் வினா

"திமுக தலைவர் மு க ஸ்டாலின் அரசின் மீது தொடர்ச்சியாக பொய்யான புகார்களை கூறி வந்தால் நீதிமன்றத்திற்கு செல்ல இருப்பதாக" மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி கூறினார்.

ஆனால், மின் துறையில் ஊழல் நடைபெற்றதற்கான ஆதாரங்கள் இருப்பதற்கு மு.க.ஸ்டாலின் மறுப்பு தெரிவித்திருக்கிறார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி "காற்றாலை மின்சாரம் வாங்கியதில் பல கோடி ரூபாய் மோசடி நடந்திருப்பதாக தி.மு.க தலைவர் ஸ்டாலின் கூறும் குற்றச்சாட்டுகள் பொய்யானவை" என்றார்.

"ஏற்கனவே நிலக்கரி பற்றாக்குறை குறித்து ஆதாரங்களே இல்லாமல் பொய்யான குற்றச்சாட்டை முன்வைத்து ஸ்டாலின் தற்போது காற்றாலை ஊழல் என தொடர்ந்து பொய்யாக குற்றம் சாட்டி இருப்பதாக" அவர் கூறினார்.

இந்தநிலையில், தி.மு.க தலைவர் ஸ்டாலின் விடுத்திருக்கும் அறிக்கையில் ஆதாரம் இல்லாமல் தாம் ஒருபோதும் குற்றச்சாட்டுகள் முன் வைப்பதில்லை" என்று குறிப்பிட்டிருக்கிறார்.

மின்வாரியத்தின் திருநெல்வேலி மண்டல கணக்கு தணிக்கை பிரிவின் உதவி தணிக்கை அதிகாரியின் அறிக்கையில், "மின்சாரம் உற்பத்தி செய்யாத ஒரு கற்றாலையின் பெயரில் 9,17,3379 ரூபாய் மதிப்புள்ள காற்றாலை மின்சாரம் பெறப்பட்டதாக போலி ஒதுக்கிடு கணக்கு காட்டப்பட்டு இருப்பதாக" அதிகாரிகள் கூறிஇருப்பதை சுட்டிக்காட்டியுள்ளர்.

இந்த ஆதாரத்தின் பேரில் ஊழல் குறித்து சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட தமிழக அரசு தயாரா? என ஸ்டாலின் வினா விடுத்துள்ளார்.

You'r reading சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட தமிழக அரசு தயாரா? ஸ்டாலின் கேள்வி Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - பட்டதாரிகளுக்கு வங்கியில் பணி - தேர்வு அறிவிப்பு

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்