தீபாவளி சிறப்பு ரயில்... விரைவில் அறிவிப்பு

தீபாவளி சிறப்பு ரயில்கள் குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என தெற்கு ரயில்வே பொதுமேலாளர் குல்ஸ்ரேஷ்தா கூறினார்.

சென்னை அயனாவரத்தில் உள்ள பயிற்சி மையத்தில், ரயில்வே பாதுகாப்பு படையின், 33வது எழுச்சி தினத்தையொட்டி அணிவகுப்பு நிகழ்ச்சி நடந்தது. தெற்கு ரயில்வே பொதுமேலாளர் குல்ஸ்ரேஷ்தா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பரிசுகளை வழங்கி உரையாற்றினார்.

நிகழ்ச்சியின் போது பேசிய அவர், " 136 ரயில் நிலையங்களில் சுமார் 72 கோடி மதிப்பீட்டில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படஉள்ளது. தற்போது வரை 14 ரயில் நிலையங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது." என்றார்.

"ரயில் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. பெண் பயணிகளின் பாதுகாப்பிற்காக பெண் காவலர்கள் அடங்கிய பிரிவும் உருவாக்கப்பட்டுள்ளது. இ டிக்கெட் முறைகேட்டை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது."

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தெற்கு ரயில்வே பொதுமேலாளர் குல்ஸ்ரேஷ்தா, இந்தியாவில் வீட்டை விட்டு வெளியேறும் குழந்தைகள் என்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டில் மட்டும் ரயில் நிலையங்களில் காணாமல் போன 846 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளனர்.

"ரயில்வே பாதுகாப்பு படையும், தன்னார்வ அமைப்புகளும் இணைந்து மீட்கப்பட்ட குழந்தைகள் பாதுகாப்பு குறித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்." எனக் கூறினார்.

"தீபாவளி சிறப்பு ரயில்கள் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும். கடந்தாண்டை போல் நடப்பாண்டும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்" எனக் ரயில்வே பொதுமேலாளர் குல்ஸ்ரேஷ்தா தெரிவித்தார். மேலும் பரங்கிமலை விபத்து குறித்து தயார் செய்யப்பட்ட அறிக்கையின் அடிப்படையில், நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் உறுதி அளித்தார்.

You'r reading தீபாவளி சிறப்பு ரயில்... விரைவில் அறிவிப்பு Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட தமிழக அரசு தயாரா? ஸ்டாலின் கேள்வி

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்