ரஜினிகாந்த் டிசம்பர் 31ஆம் தேதி ஹாப்பி நியூ இயர் தான் சொல்வார் - எஸ்.வி.சேகர்

ரஜினி 31-ந்தேதி செய்தி சொல்வார் என்று சொல்கிறார்கள், எனக்குத் தெரிந்து அவர் அரசியல் பிரவேசம் பற்றிச் சொல்வதை விட ஹாப்பி நியூ இயர் என்று தான் சொல்வார் என்று நினைக்கிறேன் என்று பாஜக பிரமுகரும், நடிகருமான எஸ்.வி.சேகர் கூறியுள்ளார்.

ரஜினி 31-ந்தேதி செய்தி சொல்வார் என்று சொல்கிறார்கள், எனக்குத் தெரிந்து அவர் அரசியல் பிரவேசம் பற்றிச் சொல்வதை விட ஹாப்பி நியூ இயர் என்று தான் சொல்வார் என்று நினைக்கிறேன் என்று பாஜக பிரமுகரும், நடிகருமான எஸ்.வி.சேகர் கூறியுள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய எஸ்.வி.சேகர், “ரஜினிக்கு அரசியல் புதிதல்ல; அதை அவர் அறியாதவரும் அல்ல. விஜயகாந்த் அரசியலுக்கு வருவதற்கு முன் மூன்று முறை தமிழகம் முழுதும் சுற்றுப்பயணம் செய்தார்.

96-ல் கிடைத்த மிகப்பெரிய சந்தர்ப்பத்தை நழுவ விட்டவர்தான் ரஜினிகாந்த். அவர் திரும்ப வருவாரா? மிக வேகமாக ஓடுவாரா? அதற்கு அவர் உடல்நிலை ஒத்துழைக்குமா எனக்கு தெரியாது. ஒரு எம்.எல்.ஏ ஆக வேண்டுமென்று ஆசைப்பட்டால் சரி. முதல்வராக வேண்டும் என்பது மிகப் பெரிய விஷயம். அவருக்கு கடவுள் அருள் இருந்தால் முடியும்.

ரஜினி 31-ந்தேதி செய்தி சொல்வார் என்று சொல்கிறார்கள், எனக்குத் தெரிந்து அவர் அரசியல் பிரவேசம் பற்றிச் சொல்வதை விட ஹாப்பி நியூ இயர் என்று தான் சொல்வார் என்று நினைக்கிறேன்.

ரஜினி குறித்து அமிதாப் பேசலாம். தமிழருவி மணியன் பேசுவது நகைச்சுவையாக உள்ளது. அரசியல் பிரவேசம் அறிவிப்பு அவர் அறிவிக்கும் வரை உலகத்தின் மிகப் பெரிய சூதாட்டமாகத்தான் இருக்கும்” என்றார்.

You'r reading ரஜினிகாந்த் டிசம்பர் 31ஆம் தேதி ஹாப்பி நியூ இயர் தான் சொல்வார் - எஸ்.வி.சேகர் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ரஜினிகாந்த் அரசியல் அறிவிப்பு குறித்து மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள்?

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்