ஸ்டெர்லைட் எதிர்ப்பு குழு ஸ்டாலினுடன் சந்திப்பு!

ஸ்டெர்லைட் எதிர்ப்பு குழு ஸ்டாலினுடன் சந்திப்பு

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்திற்கு ஆதரவளிக்கக் வலியுறுத்தி எதிர்ப்புக் குழுவினர் தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலினை சந்தித்து பேசினர்.

 

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தி.மு.கவின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் இந்த சந்திப்பு நடந்தது. பின்னர் பேசிய ஸ்டெர்லைட் எதிர்ப்பு கூட்டமைப்பை சேர்ந்த வசந்தி, ஸ்டெர்லைட் ஆலையை மூட கொள்கை முடிவாக அறிவிக்க வலியுறுத்தி ஸ்டாலினை சந்தித்தோம்.

"மனு கொடுக்கக்கூட சுதந்திரமாக செல்ல முடியவில்லை. சுற்றுப்புற மக்கள் அதிகம் பாதிப்பு. 50கிமீ தொலைவில் உள்ள மக்களை அழைத்து வந்து ஸ்டெர்லைட் ஆலையை திறக்க மனு கொடுக்க வைத்துள்ளனர்."

"பணம் கொடுத்து 45,000 பேரை கையெழுத்து போட வைத்துள்ளனர். பாதிக்கப்பட்ட மக்கள் சென்னை மக்கள் அல்ல தூத்துக்குடி மக்கள்.ஆனால் சென்னை மக்கள் கூட பணம் கொடுத்து அழைத்து வரப்பட்டுள்ளனர்." 

"மக்களுக்கு பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி தொடர்ந்து போராடுவோம்." என ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டக் குழுவினர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். 

You'r reading ஸ்டெர்லைட் எதிர்ப்பு குழு ஸ்டாலினுடன் சந்திப்பு! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - அமைச்சர்களுக்கு நாவடக்கம் தேவை- பொன் ராதாகிருஷ்ணன்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்