கடலூர் ஏரியில் தங்க புதையலா! ஆச்சரியம் கலந்த பயத்தில் பொதுமக்கள்

வீராணம் ஏரியிலிருந்து கடந்த 4 நாட்களாக காற்றுக்குமிழ்கள் கொப்பளித்து வெளியேறிக் கொண்டிருக்கிறது. தொடர்ந்து காற்றுக்குமிழ்கள் வெளியேறுவதால், உள்ளே தங்கப்புதையல் இருக்கலாம் என்ற தகவல் பொதுமக்கள் மத்தியில் பரவி வருகிறது.  இதை அதிகளவிலான பொதுமக்கள் வந்து ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர்.

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள வீராணம் ஏரி சென்னை மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்குகிறது. சமீபத்தில் மேட்டூர் அணை நிரம்பி அங்கிருந்து திறந்து விடப்பட்ட நீரால் வீராணம் ஏரி தற்போது கடல் போல காட்சியளிக்கிறது.

இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த சிலர் கூறுகையில் வீராணம் ஏரியிலிருந்து ஓவ்வொரு ஆண்டும்இதேபோல் காற்றுக்குமிழ்கள் வெளியேறிக் கொண்டிருக்கிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பீதியடையந்துள்ளனர்.

மேலும் காற்றுக்குமிழ்கள் வெளியேறும் இடத்தில் புதையல் இருப்பதாகவும் பொதுமக்களிடையே தகவல் பரவி வருகிறது. எனவே பொதுமக்களின் அச்சத்தையும், பீதியையும் போக்கும் வகையில் சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் வீராணம் ஏரியை ஆய்வு செய்ய வேண்டும். மேலும் ஏரியில் குமிழ்கள் வெளியேறும் இடத்தில் தொல்லியல் துறையினர் ஆராய்ச்சி மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

You'r reading கடலூர் ஏரியில் தங்க புதையலா! ஆச்சரியம் கலந்த பயத்தில் பொதுமக்கள் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - 5 கோடி பேஸ்புக் கணக்குகள் ஹேக்-அதிர்ச்சி தகவல்!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்