ஹைட்ரோ கார்பன் அனுமதி - இந்திய கம்யூனிஸ்ட் கண்டனம்

ஹைட்ரோ கார்பன் அனுமதி

ஹைட்ரோகார்பன் எடுக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால், தமிழகம் போர்க்களமாக மாறும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் 3 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் ஒப்பந்தத்தில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் மற்றும் வேதாந்த நிறுவனத்துடன் இணைந்து மத்திய அரசு கையெழுத்தாகி உள்ளது. இதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்த அக்கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், "தமிழகத்தில் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால், மாநிலம் போர்க்களமாக மாறும். சிதம்பரம், டெல்டா மாவட்டங்களில் இந்த திட்டத்தை செயல்படுத்த மத்திய முனைப்பு"

"இது தமிழக மக்களை ஏமாற்றும் செயல். டெல்டாவை பாலைவனமாக்கும் நோக்கில் அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. விவசாயிகள், காவிரி டெல்டா மாவட்ட மக்களுக்கு எதிரான இந்த மூர்க்கத்தனமான போக்கை மத்திய அரசு கைவிட வேண்டும்" என முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.

You'r reading ஹைட்ரோ கார்பன் அனுமதி - இந்திய கம்யூனிஸ்ட் கண்டனம் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - சரவெடியாய் தெறிக்கும் சர்க்கார் டிராக் லிஸ்ட் இதோ!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்