வண்ணப்படங்களுடன் 11ம் வகுப்பு இரண்டாம் தொகுதி பாட புத்தகங்கள்

Sale for 11th std second volume books

மாணவர்களை கவர்ந்திழுக்கும் வகையில், வண்ணப் படங்கள், தரமான அச்சடிப்புடன், 11ம் வகுப்புக்கான இரண்டாம் தொகுதி புத்தகங்கள் வெளியாகி உள்ளன.

நடப்பு கல்வியாண்டில் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு புதிய பாட புத்தகங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. மொழிப்பாடங்கள் தவிர்த்து, அறிவியல், கணிதம் உள்ளிட்ட பல பாடங்களுக்கு, இரு தொகுதிகளாக புத்தகங்கள் தயாரிக்கப்பட்டன. பள்ளி திறந்ததும் முதல் தொகுதி புத்தகங்கள் வழங்கப்பட்டன.

தற்போது, பாடங்களுக்கான இரண்டாம் தொகுதி பாட புத்தகங்களும், பாடநுால் கழக அலுவலகத்தில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

முதல் தொகுதி புத்தகங்களைப்போல், வண்ணப்படங்கள் மற்றும் கவர்ந்திழுக்கும் அட்டைப்படங்கள், தரமான அச்சடிப்புடன் இரண்டாம் தொகுதி புத்தகங்களும் உருவாக்கப்பட்டுள்ளன. 300 முதல், 400 பக்கங்கள் கொண்ட இந்த பாட புத்தகங்களின் விலை, 110 ரூபாய் முதல், 170 ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

You'r reading வண்ணப்படங்களுடன் 11ம் வகுப்பு இரண்டாம் தொகுதி பாட புத்தகங்கள் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - மதுபோதையில் போலீசை அடி பின்னி எடுத்த நபர் கர்நாடகாவில் கைது!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்