சங்கர் ஐஏஎஸ் அகடமி நிறுவனர் சங்கரின் உடல் நள்ளிரவு தகனம்!

Shankar IAS Academy founder Sankaran funeral

நாமக்கல் மாவட்டம் காளிப்பட்டி அருகே சங்கர் ஐஏஎஸ் அகடமி நிறுவனர் சங்கரின் உடல் நள்ளிரவு தகனம் செய்யப்பட்டது. நல்லாகவுண்டம் பாளையம் பகுதியை சேர்ந்த சங்கர் 14 ஆண்டுகளாக சங்கர் ஐஏஎஸ் அகாடமி நிறுவனத்தை நடத்தி வந்தார்.

குடும்ப தகராறு காரணமான நேற்று முன்தினம் அவர் தற்கொலை செய்து கொண்டார். அவரது உடல் அண்ணா நகர் சங்கர் ஐஏஎஸ் அகடாமியில் சிறிது நேரம் வைக்கப்பட்டது மாணவர்கள் கண்ணீருடன் அவருக்கு அஞ்சலி செலுத்திய காட்சி அனைவரையும் உருகவைத்தது பிறகு அவரின் உடல் செந்த ஊரான நாமக்கல் மாவட்டம் காளிப்பட்டி அருகே உள்ள நல்லாகவுண்டம் பாளைத்திற்கு கொண்டுவரப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது அமைச்சர்கள் பி.தங்கமணி,கே.ஏ.செங்கோட்டையன்,கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தினர்.

சங்கர் அகாடமியில் பயின்று ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட பதவிகளை வகிக்கும் 100 க்கும் மேற்பட்டோரும் அஞ்சலி செலுத்தினர். அதன்பின்னர் சங்கரின் உடலுக்கு அவரது தாயார் தெய்வானை எரியூட்டினார்.

சங்கர் ஐஏஎஸ் அகாடமி நிறுவனர் சங்கரின் மறைவு இந்திய தேசத்தில் ஆளுமைகளை உருவாக்குவதில் ஒரு வெற்றிடத்தை உருவாக்கியிருக்கிறது. கடந்த 14 ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான ஐஏஎஸ் ஐபிஎஸ் அதிகாரிகளை உருவாக்கியவர்.

You'r reading சங்கர் ஐஏஎஸ் அகடமி நிறுவனர் சங்கரின் உடல் நள்ளிரவு தகனம்! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ஆந்திர மாநிலத்துக்கு செல்லும் 4 எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்