விஜயதசமியன்று அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை

Vijayadasamy Student admissions at Government School

விஜயதசமி விழாவையொட்டி, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடத்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு கல்வித்துறை இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில், அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை பெரும் சரிவை சந்தித்துள்ளது. மாணவர் எண்ணிக்கையை உயர்த்தாவிட்டால், மத்திய அரசின் நிதியுதவி கிடைக்காது என, தமிழக பள்ளி கல்வித்துறை எச்சரித்துள்ளது. மாணவர் சேர்க்கையை உயர்த்துவதற்கு, மாவட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கல்வித்துறை இயக்குநர் கருப்பசாமி வெளியிட்டுள்ள உத்தரவில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு வழங்கப்படும் 14 வகை நலத்திட்டங்கள் குறித்து பொது இடங்களில் விளம்பர பதாகைகள் வைக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் கூட்டங்கள் நடத்திய இந்த நலத்திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

பள்ளியைச் சுற்றியுள்ள குடியிருப்புகளில் 5 வயது குழந்தைகளை கண்டறிந்து அவர்களை விஜயதசமி நாளன்று பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கல்வித்துறை இயக்குநர் அறிவுறுத்தியுள்ளார்.

குழந்தைகளை பள்ளிகளில் சேர்ப்பதுடன் அன்றைய தினமே விலையில்லா பாடப்புத்தகம், சீருடைகளை வழங்க வேண்டும் என கல்வித்துறை இயக்குநர் தெரிவித்துள்ளார்.

You'r reading விஜயதசமியன்று அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - காவல்நிலையத்தில் கையெழுத்திட்ட நடிகர் விஜய்யின் தந்தை!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்