மத சடங்குகளில் தலையிட சுயகட்டுப்பாடு தேவை- சென்னை உயர்நீதிமன்றம்

Self control needs to interfere in religious ceremonies - Chennai High Court

மத சடங்குகளில் தலையிடுவதில் சுயகட்டுப்பாட்டுடன் செயல்பட வேண்டும் என பிற நீதிமன்றங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் ஆஷ்ரமத்தின் 11வது பீடாதிபதியாக இருந்த ரங்க ராமானுஜ தேசிகர், கடந்த மார்ச் 19ம் தேதி மரணமடைந்தார். பின்னர், 12வது பீடாதிபதியாக ஸ்ரீ யமுனாச்சாரியார் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவரது பட்டாபிஷேகம் நாளை நடைபெற உள்ளது.

இந்நிலையில், அவரது நியமனத்தை எதிர்த்து சென்னையை ஆசிரம சீடர் வெங்கட வரதன் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதிகள் பார்த்திபன் மற்றும் கிருஷ்ணன் ராமசாமி அடங்கிய அமர்வு முன், அவசர வழக்காக விசாரணைக்கு வந்தது.

அப்போது, 2015ஆம் ஆண்டு 11-வது மடாதிபதி எழுதி வைத்த உயிலின்படி தனக்குப் பிறகு மடாதிபதியாக நியமிக்க மூன்று பேரை பரிந்துரைத்திருந்தார். அதில் ஒருவர் ஏற்கனவே இறந்துவிட்டார். இந்நிலையில் அந்த இருவரையும் பீடாதிபதியாக நியமிக்காமல் மூன்றாவது நபரை அவசர அவசரமாக நியமிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக மனுதாரர் தரப்பில் புகார் கூறப்பட்டது.


மேலும், பீடாதிபதி நியமனத்தில் மரபு மற்றும் நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை எனவும் ஆசிரமம், பொது மத அமைப்பு என்பதால் பொது நல வழக்கு தாக்கல் செய்யலாம் எனவும் மனுதாரர் தரப்பில் வாதம் செய்யப்பட்டது. இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், இந்த மடம் குறிப்பிட்ட ஒரு பிரிவினருக்கானது என்பதால் பொது நல வழக்கு தொடர முடியாது எனக் கூறினர். மேலும், மத சடங்குகளில் தலையிடுவதில் மதச்சார்பற்ற நீதிமன்றங்கள் சுய கட்டுப்பாட்டுடன் செயல்பட வேண்டும் என அவர்கள் அறிவுறுத்தினர்.


புதிய மடாதிபதி பொறுப்பேற்க தடைவிதிக்க முடியாது என மறுத்த நீதிபதிகள், இந்த மனுவுக்கு இரண்டு வாரங்களுக்குள் பதிலளிக்க ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் ஆஷ்ரமம், இந்து சமய அறநிலையத்துறைக்கு உத்தரவிட்டனர்.

You'r reading மத சடங்குகளில் தலையிட சுயகட்டுப்பாடு தேவை- சென்னை உயர்நீதிமன்றம் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - சபரிமலை விவகாரம் பெண்களுக்கு எதிராக கருத்து செல்லும் ரஜினி!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்