ஸ்ரீரங்கம் கோயிலில் முதலமைச்சர் சாமி தரிசனம்

Chief-minister Edapadi Pazhanisamy visit Srirangam Temple

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.
ஸ்ரீரங்கம் கோயிலுக்கு வந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கோயில் நிர்வாகம் சார்பில் மாலை அணிவிக்கப்பட்டது. மங்கள வாத்தியங்கள் முழங்க, பாசுரங்கள் பாடியபடி கோயில் அர்ச்சகர்கள் முதலமைச்சருக்கு தங்க குடத்துடன் கூடிய பூரண கும்ப மரியாதை அளித்தனர். 
 
பின்னர், பிரகாரத்திற்குள் நுழைந்த முதலமைச்சருக்கு, அங்கிருந்த கோயின் யானை ஆண்டாள் ஆசி வழங்கியது. முதலில் மூலவரை தரிசனம் செய்த முதலமைச்சர், தொடர்ந்து தாயார், சக்கரதாழ்வார், உடையவர் சன்னதிகளில் தரிசனம் செய்தார். அமைச்சர்கள் வேலுமணி, வெல்லமண்டி நடராஜன், வளர்மதி, எம்பிக்கள் குமார், ரத்தினவேல் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

You'r reading ஸ்ரீரங்கம் கோயிலில் முதலமைச்சர் சாமி தரிசனம் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று அடைப்பு

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்