டெங்கு காய்ச்சலுக்கு இரட்டை குழந்தைகள் பலி

Twin babies die for dengue fever Chennai

மாதவரத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பால், ஒரே குடும்பத்தை சேர்ந்த இரட்டை குழந்தைகள் உயிரிழந்தன.

மாதவரம் தணிகாச்சலம் பகுதியை சேர்ந்த சந்தோஷ் குமார். தமிழ்நாடு உணவு பொருள் வழங்கல் துறையில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி கஜலட்சுமி. இவர்களுக்கு தட்சன், தீக்ஷா என்ற ஒரு ஆண் பெண் என இரட்டை குழந்தைகள் இருந்தனர்.

இருவரும் தனியார் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வருகின்றனர். கடந்த 5 நாட்களுக்கு முன்பு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இருவரையும் மாதவரம் அரசு மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர் ஆனால் ரத்த மாதிரியில் டெங்கு காய்ச்சல் அதிகமாக இருப்பதைக் கண்ட மருத்துவர்கள் எழும்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற இரு குழந்தைகளும் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு உயிரிழந்துள்ளனர். மாதவரம் பகுதிகளில் குப்பைகள் அகற்றப்படாமல், மூடப்படாமல் திறந்தநிலையில் கிடக்கும் கழிவு நீர் தொட்டிகளில் அதிக அளவில் உற்பத்தியாகும் கொசுக்களால் தொற்று நோய்கள் பரவுவதாக அப்பகுதிமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த இரட்டை குழந்தைகள் டெங்கு காய்ச்சலுக்கு பலியாகி இருப்பதை உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

You'r reading டெங்கு காய்ச்சலுக்கு இரட்டை குழந்தைகள் பலி Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - வடசென்னையில் முதலிரவு காட்சி நீக்கப்படும்; வெற்றிமாறன் அறிவிப்பு

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்