அடுத்த தமிழக பாஜக தலைவர் இவராக இருக்கலாம்!

He might be next Tamil Nadu BJP leader

தமிழக பாஜக தலைவர் பதவியிலிருந்து தமிழிசை சவுந்திரராஜன் இந்த முறை கண்டிப்பாக மாற்றப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக பாஜக தலைவராக இரண்டு முறை, இருந்துவிட்டதாலும் மேலும் அவரையே தொடர்ந்து தமிழக பாஜக தலைவர் பதவியில் நீடிக்க வைக்க முடியாது.

அதனால் புதிய தலைவரை தேர்வு செய்யும் பணியில் அகில இந்திய பாஜக தலைமை தீவிரமாகி இருக்கிறது. தற்போது கட்சியின் மாநில பொது செயலர்களாக இருக்கும் வானதி சீனிவாசன், கருப்பு முருகானந்தம், முன்னாள் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் ஆகியோரது பெயர்கள் அடுத்த தலைவருக்கான பட்டியலில் உள்ளதாக கூறப்படுகிறது.

இதில் வானதி சீனிவாசனுக்கு மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனும், சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு இல.கணேசன், தமிழிசை சவுந்திரராஜன் ஆகியோர் சிபாரிசு செய்து இருப்பதாக கூறப்படுகிற்து. இந்த மூவரில் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கே தலைவராகும் வாய்ப்பு அதிகம் உள்ளதாக பாஜக மேலிட தகவல்கள் தெரிவிக்கின்றன.

You'r reading அடுத்த தமிழக பாஜக தலைவர் இவராக இருக்கலாம்! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - தோனி, காம்பீரை வேட்பாளர்களாக களமிறக்க பாஜக வியூகம்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்