தமிழகத்தில் பட்டாசு வெடிப்பதில் கூடுதல் நேரம்- உச்சநீதிமன்றம் மறுப்பு!

supreme court extends cracker bursting time only for tamil nadu

தீபாவளி அன்று பட்டாசு வெடிப்பதில் தமிழகத்திற்கு மட்டும் விலக்கு அளித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தமிழகத்தில் மட்டும் தீபாவளி நாளில் அதிகாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரை பட்டாசு வெடிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. தமிழக அரசு மற்றும் சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர்கள் தொடர்ந்த வழக்கில் ஆணை பிறப்பித்துள்ளது.

உச்சநீதிமன்றம் வெளியிட்ட உத்தரவில் தீபாவளி பண்டிகை நாளில் இரவு 8 மணி முதல் 10 மணி வரை மட்டுமே, மக்கள் பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் தமிழக அரசு தாக்கல் செய்திருந்த மனுவில் தீபாவளி அன்று அதிகாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரை பட்டாசு வெடிக்க அனுமதி வழங்க வேண்டும் எனவும் இரவில் பட்டாசு வெடிப்பது வடமாநிலத்தவரின் வழக்கம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கடைப்பிடிக்கப்பட்டு வரும் கலாச்சாரம் சார்ந்த விஷயங்களை மனதில் கொண்டு பட்டாசு வெடிக்க பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவில் மாற்றம் கொண்டு வரவேண்டும் என தமிழக அரசு மனுவில் கோரியுள்ளது.

இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் அதிகாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரை பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கி உள்ளது. அதே சமயம் நாடுமுழுவதிலும் மொத்தம் 2 மணிநேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கப்படும் என்பதால், தமிழகத்துக்கு ஏற்ற நேரத்தை நீங்களே முடிவு செய்து கொள்ளலாம். அது காலையோ அல்லது மாலையோ நீங்களே முடிவு செய்துகொள்ளலாம் என அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

You'r reading தமிழகத்தில் பட்டாசு வெடிப்பதில் கூடுதல் நேரம்- உச்சநீதிமன்றம் மறுப்பு! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - அமதியா முஸ்லீம்களை மசூதிகளில் அனுமதி வேண்டும்- ஹெச்.ராஜா

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்