ஆந்திராவுக்குச் செல்கிறது பெதாய் புயல்: சென்னைக்கு மழை

Pethai storm goes to Andhra reflects rain in Chennai

வங்க கடலில் உருவாகியுள்ள பெதாய் புயல் ஆந்திர மாநிலத்தை தாக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டிசம்பர் 17ம் தேதி, திங்களன்று பிற்பகலில் ஆந்திராவின் ஓங்கோல் மற்றும் காக்கிநாடா இடையே இப்புயல் கரையை கடக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்காள விரிகுடாவின் தென்கிழக்கு பகுதியில் உள்ள ஆழ்ந்த தாழ்வழுத்த மண்டலம் மேற்கு மற்றும் வடமேற்கில் மணிக்கு 11 கி.மீ. நகர்ந்து, கடலின் தென்கிழக்குப் பகுதியில் மையம் கொண்டுள்ளது. சென்னைக்கு கிழக்கு மற்றும் தென்கிழக்கு திசையில் 870 கி.மீ. தொலைவிலும், ஆந்திராவின் மசூலிப்பட்டினத்திற்கு தென்கிழக்கே 1040 கி.மீ. தொலைவில் இது உள்ளது.

குறைந்த தாழ்வு மண்டலம் மேலும் தீவிரமடைந்து வடக்கு மற்றும் வடமேற்காக நகர்ந்து ஆந்திர பிரதேசத்தில் ஓங்கோலுக்கும் காக்கிநாடாவுக்கும் இடையே வரும் திங்கள்கிழமை பிற்பகலில் கரையை கடக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பெதாய் புயலின் காரணமாக சென்னையில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மழை பெய்யக்கூடும். ஞாயிறு மட்டும் கனமழை பொழியக்கூடிய வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தற்போதுள்ள வளிமண்டல நிலவரப்படி, ஆந்திர கடற்கரையோரமாக ஒடிசாவை நோக்கியும் தள்ளப்பட வாய்ப்பு காணப்படுகிறது என்றும் கருதப்படுகிறது.

You'r reading ஆந்திராவுக்குச் செல்கிறது பெதாய் புயல்: சென்னைக்கு மழை Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - கர்நாடகாவில் சோகம்: கோவில் பிரசாதம் சாப்பிட்டு 11 பேர் பலி

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்