ஸ்டெர்லைட் ஆலை உடனடியாக திறக்கப்பட மாட்டாது - தூத்துக்குடி ஆட்சியர் தகவல்

Sterlite plant will not be opened immediately Thoothukudi Collector informs

ஸ்டெர்லைட் ஆலை உடனடியாக திறக்கப்பட மாட்டாது என்றும் உச்ச நீதிமன்ற தீர்ப்பிலும் உடனடியாக திறக்க வேண்டும் என்ற உத்தரவு ஏதும் இல்லை என்றும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.

ஸ்டெர்லைட் கலையை திறக்கலாம் என்ற உச்ச நீதிமன்றத் தீர்ப்பு குறித்து தூத்துக்குடியில் மாவட்ட ஆட்சித் தலைவர் சந்தீப் நந்தூரி செய்தியாளர்களைச் சந்தித்தார். அவர் கூறுகையில், உச்ச நீதிமன்ற தீர்ப்பின் முழு விவரங்களை படித்த பின் தமிழக அரசு மேல் முறையீடு செய்யும். இதனால் ஸ்டெர்லைட் ஆலை உடனடியாக திறக்கப்பட மாட்டாது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பிலும் உடனடியாக திறக்கலாம் என்று இடத்திலும் கூறப்படவில்லை.

மேலும் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் விதித்த நிபந்தனைகளை ஸ்டெர்லைட் நிர்வாகம் பின்பற்றியுள்ளதா என்றும் நிபுணர் குழு ஆராய்ந்து அறிக்கை அளிக்க வேண்டும். அதன் பின்னரே தேசிய பசுமைத் தீர்ப்பாயம் இறுதி உத்தரவை பிறப்பிக்கும் என்பதால் இப்போதைக்கு ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்படாது என்று சந்தீப் நந்தூரி தெரிவித்தார்.

You'r reading ஸ்டெர்லைட் ஆலை உடனடியாக திறக்கப்பட மாட்டாது - தூத்துக்குடி ஆட்சியர் தகவல் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - தீப்பிடித்த நான்கு மாடி கட்டடத்தில் இருந்து குழந்தைகளை தூக்கி வீசிய தம்பதியினர்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்