10% இடஒதுக்கீடு தமிழகத்துக்கு வேண்டாம் - ராஜ்யசபாவில் அதிமுக கோரிக்கை!

10% reservation to Tamilnadu AIADMK request in Rajya Sabha

பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீட்டில் தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என அதிமுக கோரிக்கை விடுத்துள்ளது.

பொருளாதார ரீதியில் பின்தங்கிய முற்பட்ட வகுப்பினருக்கு10% இட ஒதுக்கீட்டிற்கான சட்டத் திருத்த மசோதா மீது மாநிலங்களவையில் நடந்த விவாதத்தில் அதிமுக எம்.பி, நவநீதக்ருஷ்ணன் பேசுகையில், இந்த இட ஒதுக்கீட்டை அதிமுக எதிர்க்கவில்லை. தமிழகத்தில் ஏற்கனவே இது போன்ற இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. எனவே தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்றார்.

இந்த இட ஒதுக்கீட்டிற்கான சட்டத் திருத்த மசோதா நேற்று மக்களவையில் நிறைவேறியது. அப்போது அதிமுக சார்பில் தம்பித்துரை மட்டுமே பங்கேற்றார். ஓட்டெடுப்பின் போது பங்கேற்காமல் புறக்கணித்து வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

You'r reading 10% இடஒதுக்கீடு தமிழகத்துக்கு வேண்டாம் - ராஜ்யசபாவில் அதிமுக கோரிக்கை! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - எங்களை மிரட்டினால் பா.ஜ.க.வை 'பொசுக்கிடுவோம்' - சிவசேனா அமைச்சரின் ஆவேசம்!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்