மோட்டோ ரெய்ஸர்: இந்தியாவுக்கு வருமா?

will MOTO RAZR come to India?

ஐபோன் மற்றும் ஆண்ட்ராய்டு போன்கள் வருவதற்கு முன்பு, அந்தஸ்தை காட்டுவதற்கு பயன்படுத்தப்பட்டது மோட்டோ ரெய்ஸர் ஃபிலிப் போன்தான். மோட்டோரோலா ரெய்ஸர் வி3 2004ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது.

மோட்டோரோலா தனது ரெய்ஸர் வகை போன்களை மறுபடியும் கொண்டுவருவதற்கு முயற்சித்து வந்தது. தற்போது லெனோவா குழுமம் அமெரிக்காவின் வெரிஸோன் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து, அதை ஸ்மார்ட்போனாக கொண்டு வரவுள்ளது.

அமெரிக்காவில் பிப்ரவரி மாதம் முதல் மடக்கக்கூடிய ஃபோல்டபிள் வகை தொடுதிரையுடன் கிடைக்கவிருக்கும் இந்த போனின் விலை ஏறத்தாழ 1500 டாலராக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது வரை பரிசோதனை நிலையிலேயே இருப்பதால், சந்தைக்கு வரும் நாளில் மாற்றமிருக்கக்கூடும்.

இது இந்தியாவுக்கு எப்போது வரும் என்பது குறித்த தகவல் எதுவும் தற்போது கிடைக்கவில்லை.

You'r reading மோட்டோ ரெய்ஸர்: இந்தியாவுக்கு வருமா? Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - லோக்சபா தேர்தல் எப்போது? மார்ச் முதல் வாரம் வெளியாகும் எனத் தகவல்!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்