குடியரசு தின சிறப்பு விற்பனை: சலுகை விலையில் போகோ எஃப்1

Republic Day Specials Poco F1 at Offer Price

குடியரசு தினத்தை முன்னிட்டு ஃபிளிப்கார்ட் ஜனவரி 20 முதல் மூன்று நாள்களுக்கு சிறப்பு தள்ளுபடி விற்பனையை அறிவித்துள்ளது. ஸோமி போகோ எஃப்1 - 6 ஜிபி போன் இதில் சலுகை விலையில் கிடைக்கிறது.

சிறப்பம்சங்கள்:

தொடுதிரை: 6.18 அங்குலம்

இயக்கவேகம்: 6 ஜிபி

சேமிப்பளவு : 64 ஜிபி (256 ஜிபி வரை கூடுதலாக்கிக் கொள்ளலாம்)

முன்பக்க காமிரா: 20 எம்பி ஆற்றல் கொண்டது

பின்பக்க காமிரா: 12 எம்பி மற்றும் 5 எம்பி கொண்ட இரண்டு காமிராக்கள்

மின்கலம்: 4000 mAh ஆற்றல்

பிராசஸர்: குவல்காம் ஸ்நாப்டிராகன் 845

இந்த போனின் விலை 21,999 ரூபாயாக இருந்தது. இந்தியாவில் விற்பனை விலையில் நிரந்தரமாக ரூ.1,000 தள்ளுபடி கொடுக்கப்பட்டதால் 19,999 ரூபாய்க்கு கிடைத்து வருகிறது. ஃபிளிப்கார்ட் குடியரசு தின சிறப்பு விற்பனையில் ஜனவரி 20 முதல் 22ம் தேதி வரை இந்த போன் 18,999 ரூபாய்க்கு கிடைக்கும். ரெட்மி நோட் 6 ப்ரோ போனும் 1,000 ரூபாய் தள்ளுபடியில் கிடைக்கும்.

இந்த போன்கள் அல்லாது நோக்கியா, அசுஸ், ஃபோவாய், ஆனர், சாம்சங், ஒன்பிளஸ் உள்ளிட்ட பல நிறுவனங்களின் தயாரிப்புகளான போன்கள் ஜனவரி 20 முதல் 22ம் தேதி வரையிலான குடியரசு தின சிறப்பு விற்பனையில் ஃபிளிப்கார்ட் மற்றம் அமேசான் இந்தியா இணைய விற்பனை தளங்களில் சலுகை விலையில் கிடைக்கும்.

You'r reading குடியரசு தின சிறப்பு விற்பனை: சலுகை விலையில் போகோ எஃப்1 Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ட்வீட்களை பகிரங்கப்படுத்திய பக்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்