ரெட்மி நோட் 7: விரைவில் வருகிறது இந்தியாவுக்கு...

Redmi Note 7 Coming soon to India

48 எம்பி ஆற்றலுடன் கூடிய காமிராவை கொண்டிருக்கும் ரெட் மி நோட் 7 சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டதும், அது இந்தியாவுக்கு வருமா? வந்தால் எப்போது விற்பனைக்குக் கிடைக்கும்? விலை எவ்வளவு இருக்கும்? என்பது போன்ற கேள்விகள் இங்கு எழுந்தன. சமூக ஊடகங்களில் இந்தக் கேள்விகள் எதிரொலித்தன.

ஸோமி நிறுவனத்தின் இந்திய மேலாண் இயக்குநர் மனு ஜெயின், ரெட்மி நோட் 7 இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுகிறது என்று அவரது ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். சரியான தேதி இன்னும் குறிப்பிடப்படாத நிலையில், பிப்ரவரி மாதத்தின் முன் பாதியில் ரெட்மி நோட் 7 இந்தியாவில் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஸோமி நிறுவனத்தின் துணை நிறுவனமான ரெட்மியிலிருந்து முதன்முதலாக ஒரு தயாரிப்பு, தனி பெயரில் இப்போதுதான் வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள்:

தொடுதிரை: 6.3 அங்குலம்; எஃப்ஹெச்டி வகை; 1080 X 2340 தரம்; 19.5:9 திரை விகிதாச்சாரம்

இயக்கவேகம்: 3 ஜிபி / 4 ஜிபி / 6 ஜிபி என்று மூன்று வகைகள்

சேமிப்பளவு: 32 ஜிபி மற்றும் 64 ஜிபி அளவுகளில் கிடைக்கும். சேமிப்பளவை 256 ஜிபி வரை அதிகரித்துக் கொள்ள முடியும்.

முன்பக்க காமிரா: 13 எம்பி ஆற்றல்.

பின் பக்க காமிரா: 48 எம்பி மற்றும் 5 எம்பி ஆற்றல் கொண்ட இரண்டு காமிராக்கள்

பேட்டரி: 4000 mAh மின்னாற்றல்

மென்பொருள்: ஆண்ட்ராய்டு ஓரியோவை அடிப்படையாகக் கொண்ட MIUI 9

பிராசஸர்: 2.2 கிகா ஹெர்ட்ஸ் ஸ்நாப்டிராகன் 660 ஆக்டா கோர் சிஸ்டம் ஆன் சிப் செயற்கை நுண்ணறிவுடன் கூடிய முகப்பதிவு கடவுச்சொல், ஸ்மார்ட் பியூட்டி மற்றும் சிங்கிள் ஷாட் பிளர் போன்ற அம்சங்களும் உண்டு.

ஸோமி சாதனங்கள் ஆண்ட்ராய்டு பை அடிப்படையிலான MIUI 10 மென்பொருளை கொண்டிருப்பதால், விரைவிலேயே நோட் 7 சாதனமும் அதற்கு மேம்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சீனாவில் மூன்று ரகங்களாக ரெட்மி நோட் 7 போன்கள் அறிமுகம் செய்யப்பட்டிருப்பதால், இந்தியாவிலும் ஏறக்குறைய 10,000 முதல் 15,000 வரையிலான விலைகளில் இவை கிடைக்கக்கூடும்.

You'r reading ரெட்மி நோட் 7: விரைவில் வருகிறது இந்தியாவுக்கு... Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ராகுல், பாண்ட்யா மீதான சஸ்பென்ட் ரத்து - கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க அனுமதி!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்