ஏப்ரல் 2: இன்பாக்ஸ் செயலி, ஜிமெயில், கூகுள்+ மூடப்படுகின்றன

Inbox by Gmail Is Officially Shutting Down on April 2

கூகுள் நிறுவனம் தனது கூகுள்+ நுகர்வோர் சேவையை வரும் ஏப்ரல் மாதம் 2ம் தேதி நிறுத்திக் கொள்ள இருக்கிறது. அதைக் குறித்த நினைவுறுத்தலை அனைத்து பயனர்களுக்கும் அனுப்பியுள்ளது. ஜிமெயிலின் இன்பாக்ஸ் செயலியின் பயனர்களுக்கு, அந்தச் செயலி ஏப்ரல் 2ம் தேதியுடன் சேவையை நிறுத்திக் கொள்ள இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூகுள்+, ஜிமெயில், கூகுள் போட்டோஸ், கூகுள் டிரைவ், யூடியூப் என்று பல்வேறு சேவைகளை கூகுள் நிறுவனம் வழங்கி வருகிறது. இதில் பயனர்கள், பதிவுகள், புகைப்படங்கள் மற்றும் ஒளிக்கோவை (வீடியோ)களை பகிர்ந்து கொள்ளும் கூகுள்+ சேவையை மூடிவிடுவது என்று அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.

2019 ஏப்ரல் 2ம் தேதியுடன் நுகர்வோருக்கான கூகுள்+ சேவைகள் நிறுத்தப்படும் என்று அறிவித்துள்ள கூகுள், அதற்கு முன்னர் கூகுள்+ பதிவுகளில் பயனர்கள் வைத்துள்ள புகைப்படங்கள் மற்றும் ஒளிக்கோவை (வீடியோ)களை தரவிறக்கம் செய்து கொள்ளுமாறு நினைவுபடுத்தியுள்ளது.

தங்கள் கூகுள்+ சேவையை பயன்படுத்தியமைக்காக நன்றி தெரிவித்து அனைத்து பயனர்களுக்கும் அனுப்பியுள்ள மின்னஞ்சலில், தரவிறக்கம் செய்வதற்கு நீண்டநேரம் பிடிக்கும் என்பதால் மார்ச் 31ம் தேதிக்குள் தரவிறக்கம் செய்யும் வேலையை ஆரம்பிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது.

தங்களது பிற சேவைகளான ஜிமெயில், கூகுள் போட்டோஸ், கூகுள் டிரைவ் மற்றும் யூடியூப் ஆகியவை தடையறாது தொடரும் என்றும், அதே பயனர் கணக்கு மற்றும் கடவுச் சொல்லை பயன்படுத்தி இச்சேவைகளை தொடர்ந்து பெற்றுக்கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ள கூகுள் நிறுவனம், கூகுள் போட்டோஸ் கணக்கில் சேகரித்து வைக்கப்பட்டுள்ள புகைப்படங்கள் மற்றும் ஒளிக்கோவைகள் பாதுகாப்பாக இருக்கும் என்றும் கூறியுள்ளது.

ஜிமெயில் செயலியில் இன்பாக்ஸ் 2014ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. தினசரி அதிக மின்னஞ்சல்களை பெறுவோர் பயன்பெறும் வண்ணம் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. பயனர்கள், இதன் மூலம் பல்வேறு செயல்பாடுகளை எளிதாக செய்ய முடிந்தது. தற்போது கூகுள்+ உடன் ஜிமெயில் செயலியின் இன்பாக்ஸும் மூடப்படுகிறது.

You'r reading ஏப்ரல் 2: இன்பாக்ஸ் செயலி, ஜிமெயில், கூகுள்+ மூடப்படுகின்றன Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - அமமுகவில் நீக்கப்பட்ட கலைராஜன் திமுகவில் ஐக்கியமானார்; டி.டி.வி.க்கு முன்கூட்டியே தகவல் கூறிவிட்டாராம்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்