வாட்ஸ்அப்: ஆடியோ ஃபைல் புதிய வசதி

Now WhatsApp will let you send 30 audio files at once

வாட்ஸ்அப் செயலியில் பயனர் இடைமுகம் ஒன்று புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அதன் மூலம் ஒரே நேரத்தில் 30 ஒலிக்கோவைகளை (ஆடியோ ஃபைல்) அனுப்ப முடியும்.

'ஆடியோ பிக்கர்' (audio picker) என்ற பயனர் இடைமுகம் வாட்ஸ்அப் செயலியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன் மூலம் மற்ற பயனருக்கு அனுப்புவதற்கு முன் ஆடியோ ஃபைல் என்னும் ஒலிக்கோவையை கேட்கலாம். அதிக எண்ணிக்கையில் ஆடியோ ஃபைல்களை அனுப்பலாம்.

இதுவரைக்கும் வாட்ஸ்அப் அரட்டையின் மூலம் ஒரு சமயத்தில் ஒரே ஒரு ஒலிக்கோவையை (ஆடியோ ஃபைல்) மட்டுமே அனுப்ப முடியும். தற்போது கிடைக்கும் 2.19.89 என்ற வாட்ஸ்அப் செயலியின் பீட்டா மேம்பட்ட வடிவில் 30 வரைக்குமான எண்ணிக்கையிலான ஒலிக்கோவைகளை (ஆடியோ ஃபைல்) இன்னொரு பயனருக்கு அனுப்ப முடியும்.

You'r reading வாட்ஸ்அப்: ஆடியோ ஃபைல் புதிய வசதி Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - மீண்டும் வரப்போகும் பிக் பாஸ்... கமல் கேட்ட சம்பளத்தால் தலைசுற்றிப்போன விஜய் டிவி

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்