ஆப்போ A5s ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்

OPPO unveils A5s budget smartphone in India

பட்ஜெட் ரக ஸ்மார்ட்போனாக ஆப்போ நிறுவனம் A5s மொபைலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. மீடியாடெக் ஹீலியோ பி35 சிப்செட் பிராசஸருடன் இது சந்தைக்கு வந்துள்ளது.

மின்னாற்றலை குறைவாக பயன்படுத்தக்கூடிய செயற்கை நுண்ணறிவுடன் (AI), 4230 mAh பேட்டரி கொண்டுள்ளது. அடிப்படை பிரிவான 2 ஜிபி RAM இயக்கவேகம் மற்றும் 32 ஜிபி சேமிப்பளவுடன் கூடிய ஆப்போ A5s ரூ,9,990 விலையில் கிடைக்கிறது. ஆண்ட்ராய்டின் கலர்ஸ் இயங்குதளம் 5.2.1 பிரிவில் இது இயங்குகிறது.

6.2 அங்குல வாட்டர்டிராப் தொடுதிரையுடன் 8எம்பி முன்பக்க காமிரா மற்றும் பின்பக்கம் 13 எம்பி, 2 எம்பி ஆற்றல் கொண்ட இரட்டை காமிராக்கள் இதில் உள்ளன. அமேசான், ஃபிளிப்கார்ட், பேடிஎம் மால், ஸ்நாப்டீல் மற்றும் டாடா கிளிக் ஆகிய இணையதளங்களிலும் ஏனைய நேரடி விற்பனை நிலையங்களிலும் இது விற்பனையாகிறது.

4 ஜிபி RAM இயக்க வேகம் மற்றும் 64 ஜிபி சேமிப்பளவு கொண்ட ஆப்போ A5s ஸ்மார்ட்போன் அடுத்த மாதம் சந்தைக்கு வர உள்ளது.

You'r reading ஆப்போ A5s ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - மே 1 முதல் ஹெல்மெட் வாங்கினாதான், பைக் வாங்க முடியும்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்