வேகம் போதாத இணைப்பு: இன்ஸ்டாகிராமில் மாற்றம்

Due to less data speed instagram brings out new changes

பயனர் கவனம் தப்பினால் சமூக ஊடக செயலியான இன்ஸ்டாகிராம் அதிக மொபைல் டேட்டாவை பயன்படுத்திவிடக்கூடும். சரியான தொடர்பு மற்றும் போதுமான வேகம் இல்லாத இணைப்பில் படங்களை தரவிறக்கம் செய்வதற்கு இன்ஸ்டாகிராமில் அதிக நேரம் பிடிக்கிறது. இணைப்பின் வேகம் மற்றும் தரம் குறைந்த இடங்களிலும் தடையில்லாமல் செயல்படுவதற்கு வசதியாக டேட்டா சேமிப்பு (சேவர்) என்ற சிறப்பம்சத்தை இன்ஸ்டாகிராம் அறிவித்துள்ளது. ஆண்ட்ராய்டு இயங்குதள பயனர்கள் மட்டுமே இந்த வசதியை பெற இயலும்.


இன்ஸ்டாகிராம் அறிவித்துள்ள புதிய சிறப்பம்சத்தின்படி ஒளிக்கோவைகள் (வீடியோ) மற்றும் உயர்தரம் வாய்ந்த படங்கள் தாமாக தரவிறக்கம் செய்யப்படாது. பயனர் கோரினால் மட்டுமே அவை தரவிறக்கம் செய்யப்படும். தேவையற்ற தரவிறக்கம் நடைபெறாததால் இணைப்பு வேகம் குறைந்திருக்கும் இடங்களிலும் இன்ஸ்டாகிராம் தடையின்றி செயல்பட இயலும்.


ஃபேஸ்புக் நிறுவனத்திற்குச் சொந்தமான இன்ஸ்டாகிராமில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இச்சிறப்பம்சம் குறித்து, "டேட்டா சேமிப்பு சிறப்பம்சத்தின் உதவியால் வேகம் குறைந்த இணைப்பு கிடைக்கும் பகுதிகளிலிருந்தும் பயனர்கள் தங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரோடு தடையற்றவண்ணம் தொடர்பு கொள்ள இயலும் என்று நம்புகிறோம்," என்று ஃபேஸ்புக் இந்தியா பிரிவின் பங்குதாரர் துறை தலைவர் மணிஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.


இப்புதிய வசதி ஒரு வார காலத்திற்குள் சிறிது சிறிதாக பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

You'r reading வேகம் போதாத இணைப்பு: இன்ஸ்டாகிராமில் மாற்றம் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - இலங்கையில் கதாநாயகன் தமிழில் வில்லன் ஆகிறார்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்