ஆகஸ்ட் முதல் விற்பனைக்கு வருகிறது சாம்சங் கேலக்ஸி ஏ80

Samsung launched Galaxy A80 with triple rotating camera

சுழலக்கூடிய மூன்று காமிராக்களை கொண்ட முதல் ஸ்மார்ட்போன் கேலக்ஸி ஏ80 தான். வரும் ஆகஸ்ட் மாதம் 1ம் தேதி முதல் நேரடி விற்பனை நிலையங்கள் மற்றும் இணையதளங்களில் இது விற்பனைக்கு வருகிறது.

சாம்சங் கேலக்ஸி ஏ80 போனின் சிறப்பம்சங்கள்

தொடுதிரை: 6.7 அங்குலம் எஃப்ஹெச்டி; சூப்பர் AMOLED

இயக்கவேகம்: 8 ஜிபி RAM

சேமிப்பளவு: 128 ஜிபி

காமிரா: இதில் மூன்று காமிராக்கள் உள்ளன. மூன்றும் பாப்-அப் மற்றும் சுழலும் தன்மை கொண்டவை. முப்பரிமாண தரம் கொண்ட காமிராக்கள் நேரடியாக வீடியோ பதிவு செய்யத்தக்க ஆற்றல் கொண்டவை. 48 எம்பி ஆற்றல் கொண்டது மட்டுமன்றி அகன்ற கோணத்தில் படம் எடுக்கக்கூடியவை.

பிராசஸர்: குவல்காம் சிநாப்டிராகன் 730ஜி ஆக்டாகோர் சிப்செட்

இயங்குதளம்: ஆண்ட்ராய்டு பை; இதன் முன்தளத்தில் சாம்சங் நிறுவனத்தின் ஒன் பயனர் இடைமுகம் பயன்படுத்தப்படுகிறது

மின்கலம்: 3,700 mAh (வேகமாக சார்ஜ் ஏற்றிக்கொள்ள 25W திறன்)
சாம்சங் கேலக்ஸி ஏ80 ஸ்மார்ட்போனுக்கு விலையாக ரூ.47,990/-நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

You'r reading ஆகஸ்ட் முதல் விற்பனைக்கு வருகிறது சாம்சங் கேலக்ஸி ஏ80 Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - கூந்தலை பராமரிக்க எளிய வழிகள்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்